IPL 2024: ஐபிஎல் இறுதிப்போட்டி இங்க தானா?…வொய் திஸ் கொலைவெறி?

Published On:

| By Manjula

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி எங்கே நடத்தப்பட இருக்கிறது? என்கிற விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளன.

17-வது ஐபிஎல் தொடர் வருகின்ற ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ளது. ஏப்ரல் 1 தொடங்கி ஜூன் 2 வரை நடைபெறும் இந்த தொடரில் மொத்தம் 1௦ அணிகள் கலந்து கொள்கின்றன.

சென்னை அணியின் பேவரைட் கேப்டன் தோனி இந்த தொடருடன் ஐபிஎல்லில் இருந்தும் ஓய்வு பெறுகிறார். இதனால் முன்னெப்போதையும் விட இந்த சீசனுக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் நிலவுகிறது.

ஏப்ரல் 1-ம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் சென்னை அணியும், குஜராத் அணியும் மோதுகின்றன. அதன்படி இந்த சீசனின் அதிக வயது கேப்டன் தோனியும், இளம்வயது கேப்டன் கில்லும் மும்பை டிஒய் படேல் மைதானத்தில் நேருக்கு நேர் மோதிக்கொள்ள உள்ளனர்.

இந்த நிலையில் ஐபிஎல் இறுதிப்போட்டி எங்கே நடைபெறும்? என்கிற விவரங்கள் தெரிய வந்துள்ளன. உலகக்கோப்பை இறுதிப்போட்டி நடைபெற்ற குஜராத்தின் நரேந்திர மோடி ஸ்டேடியம் தான் அது. அங்கு ஜூன் 2-ம் தேதி ஐபிஎல் பைனல் நடைபெறவுள்ளது.

அந்த மைதானம் ஓபனிங், சேஸிங் இரண்டிற்குமே சாதகமாக இருப்பதால், இறுதிப்போட்டியை வேறு ஏதாவது மைதானத்தில் நடத்துமாறு ரசிகர்கள் தற்போது பிசிசிஐ-க்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்திய அணி உலகக்கோப்பை இறுதியில் தோல்வியைத்தழுவியதால், நரேந்திர மோடி மைதானம் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.

-மஞ்சுளா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

எங்கே செல்லும் இந்தப் பாதை: அப்டேட் குமாரு

டிஜிட்டல் திண்ணை: சட்டமன்றத்தில் ஆளுநர் உரை… ஸ்டாலின் -ஆர்.என்.ரவி. தனித்தனியே ஆலோசனை! மீண்டும் சம்பவம்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share