MS Dhoni: சிஎஸ்கே கேப்டன் தோனியின் ‘புதிய’ ரோல் வெளியானது!

Published On:

| By Manjula

ipl 2024 ms dhoni csk

சென்னை அணியின் கேப்டன் மஹேந்திர சிங் தோனியின் புதிய ரோல் குறித்து தற்போது தெரியவந்துள்ளது.

தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் கடந்த மார்ச் 4-ம் தேதி சென்னை அணியின் கேப்டன் தோனி, ”புதிய சீசனில் புதிய வேலைக்காக காத்திருக்க முடியவில்லை. தொடர்ந்து காத்திருங்கள்”, என பதிவிட்டிருந்தார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் அது என்னவாக இருக்கும்? என குழம்பி தவித்தனர். மறுபுறம் இது வழக்கம்போல ஒரு விளம்பரமாக தான் இருக்கும் என பலரும் கணித்திருந்தனர்.

இந்தநிலையில் தற்போது அதற்கான விடை தெரியவந்துள்ளது. ஜியோ சினிமாவின் ஐபிஎல் விளம்பரத்தில் தோனி நடித்திருக்கிறார். அதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதில் இளமையான மற்றும் வயதான என இரண்டு வேடங்களில் தோனி நடித்திருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் வயதான வேடத்தில் தோனி நன்றாக இருப்பதாகவும், அவரின் நடிப்பு மிக இயல்பாக உள்ளதாகவும் பாராட்டி வருகின்றனர்.

ipl 2024 ms dhoni csk

மார்ச் 22 சென்னையில் நடைபெறும் முதல் ஐபிஎல் போட்டியில் சென்னை – பெங்களூர் அணிகள் நேருக்கு நேராக மோதுகின்றன.

ஐபிஎல் பயிற்சிக்காக நேற்று (மார்ச் 5) சென்னை வந்த தோனிக்கு அணியின் சார்பில் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. அதோடு ‘லியோ’ படத்தின் BadAss பாடலில் நடிகர் விஜய்க்கு பதிலாக, தோனியை வைத்து எடிட் செய்து வீடியோ ஒன்றினையும் சென்னை அணி வெளியிட்டுள்ளது.

இந்த வீடியோ தற்போது பட்டிதொட்டியெங்கும் பரவி தோனி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. விரைவில் தோனி சேப்பாக்கம் மைதானத்தில் தன்னுடைய பயிற்சியினை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

-மஞ்சுளா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மகளுக்காக மீண்டும் ரிஸ்க் எடுக்கும் ரஜினி?

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு நிவாரணம்: எடப்பாடி வலியுறுத்தல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share