IPL 2024: எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்… நம்பிக்கை அளிக்கும் CSK வீரர்!

Published On:

| By Manjula

ipl 2024 csk mustafizur rahman

‘எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்’ என, சென்னை அணியின் வீரர் ஒருவர் ட்வீட் செய்துள்ளார். அது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ipl 2024 mustafizur rahman

சென்னை அணி வருகின்ற 22-ம் தேதி தன்னுடைய முதல் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியை எதிர்கொள்கிறது. நடப்பு சாம்பியன் என்பதால் முதல் போட்டியை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் சென்னை உள்ளது.

ADVERTISEMENT

இதற்கிடையில் ரசிகர்களுக்கு கவலை அளிக்கும்விதமாக அடுத்தடுத்து வீரர்கள் காயத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். டெவன் கான்வே, பதிரனா இருவரும் தற்போது காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

ipl 2024 csk mustafizur rahman

ADVERTISEMENT

இந்த வரிசையில் நேற்று (மார்ச் 18) வங்காள தேசம் வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மானும் இணைந்தார். இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியின்போது பந்துவீசிய அவர் தசைப்பிடிப்பு காரணமாக, மைதானத்திலேயே சுருண்டார். தொடர்ந்து அவரை ஸ்ட்ரெச்சரில் எடுத்து செல்லும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.

GOLD RATE: உச்சம் தொட்ட தங்கம்… கதி கலங்கும் வாடிக்கையாளர்கள்!

ADVERTISEMENT

இதைப்பார்த்த சென்னை ரசிகர்கள் ‘அடிமேல அடியா விழுதே’ என வருத்தத்துடன் சமூக வலைதளங்களில் சோக ஸ்டேட்டஸ் போட்டனர்.

இந்தநிலையில் தன்னுடைய உடல்நிலை குறித்த தகவல்களுக்கு, முஸ்தாபிசுர் ரஹ்மான் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

தன்னுடைய எக்ஸ் தளத்தில் அவர், ”என்னுடைய புதிய பணியை உற்சாகத்துடன் எதிர்நோக்கி காத்திருக்கிறேன். 2௦24 ஐபிஎல் தொடருக்காக சென்னையை நோக்கி வந்து கொண்டுள்ளேன்.

எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள். அப்போது தான் சிறந்த பந்துவீச்சினை என்னால் பதிவு செய்ய முடியும்,” என மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

IPL 2024: இதுக்கு பருத்திமூட்டை ‘குடோன்லேயே’ இருந்துருக்கலாம்… கிண்டலடிக்கும் ரசிகர்கள்!

அவரின் இந்த ட்வீட்டினை பார்த்த ரசிகர்கள், ”வந்துட்டாப்ல.. வந்துட்டாப்ல” என மகிழ்ச்சியுடன் அவருக்கு பதில் அளித்து வருகின்றனர். மேலும் சென்னை வரும் ரஹ்மானுக்கு வாழ்த்துகளையும் பதிவு செய்து வருகின்றனர்.

முஸ்தாபிசுர் ரஹ்மானின் வருகை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, மேலும் உற்சாகத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-மஞ்சுளா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

“இம்முறை 400க்கும் மேல்” : சேலத்தில் தமிழில் பேசிய மோடி

CSK-விடம் உதவி கேட்ட அஸ்வின்… அவரின் ஆசை நிறைவேறுமா?

ஒரே மேடையில் இரு ஓபிசி தலைவர்கள் : பாஜக பொதுக்கூட்டத்தில் அன்புமணி பேச்சு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share