ADVERTISEMENT

IPL 2024 Awards: ஆரஞ்சு கேப் முதல் பர்பிள் கேப் வரை – எந்த விருது யாருக்கு?

Published On:

| By Kavi

IPL 2024 Awards: மார்ச் 22 அன்று சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக துவங்கிய 2024 ஐபிஎல் தொடர், அதே சேப்பாக்கம் மைதானத்தில் மே 26 அன்று அதிரடியாக நிறைவு பெற்றது.

இந்த தொடரின் இறுதிப்போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதிக்கொண்டன. முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத், கொல்கத்தாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 113 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. பின் வெங்கடேஷ் அய்யர் அதிரடியால், கொல்கத்தா அணி 114 ரன்கள் இலக்கை 10.3 ஓவர்களிலேயே எட்டியது.

ADVERTISEMENT

இதன்மூலம், 10 ஆண்டுகளுக்கு பிறகு தனது 3வது ஐபிஎல் கோப்பையை ஷ்ரேயஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கைப்பற்றியது.

ஆரஞ்சு கேப் – விராட் கோலி

ADVERTISEMENT

இந்த தொடரில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக 15 போட்டிகளில் விளையாடி 741 ரன்களை சேர்த்த விராட் கோலி, ‘ஆரஞ்சு கேப்’ விருதை வென்றார். அவர், இந்த தொடரில் 1 சதம், 5 அரைசதங்களை விளாசி இருந்தார்.

ADVERTISEMENT

பர்பிள் கேப் – ஹர்ஷல் பட்டேல்

மறுபுறத்தில், பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக 14 போட்டிகளில் 24 விக்கெட்களை கைப்பற்றிய ஹர்ஷல் பட்டேல், இந்த தொடருக்கான ‘பர்பிள் கேப்’ விருதை வென்றார். பர்பிள் பட்டேல் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் ஹர்ஷல் பட்டேல் வெல்லும் 2வது ‘பர்பிள் கேப்’ விருது என்பது குறிப்பிடத்தக்கது.

2021 ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடிய ஹர்ஷல் பட்டேல், அந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 32 விக்கெட்களை கைப்பற்றி ‘பர்பிள் கேப்’ விருதை வென்றிருந்தார்.

சூப்பர் சிக்ஸஸ் ஆஃப் தி சீசன் – அபிஷேக் சர்மா

2024 ஐபிஎல் தொடருக்கான ‘சூப்பர் சிக்ஸஸ் ஆஃப் தி சீசன்’ விருதை, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் இளம் வீரர் அபிஷேக் சர்மா வென்றுள்ளார். ஐதராபாத் அணி இறுதிப்போட்டி வரை முன்னேற மிக முக்கிய பங்கு வகித்த அபிஷேக் சர்மா, பல போட்டிகளில் அந்த அணிக்காக அதிரடி துவக்கம் அளித்து, தொடர் முழுவதும் 42 சிக்ஸ்களை விளாசியுள்ளார்.

அவர் 16 போட்டிகளில் 204.21 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 484 ரன்களையும் விளாசியுள்ளார்.

ஆன்-தி-கோ 4ஸ் ஆஃப் தி சீசன் – டிராவிஸ் ஹெட்

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி இறுதிப்போட்டி வரை முன்னேறியதற்கு, அபிஷேக் சர்மாவின் பங்கு எவ்வளவுக்கு எவ்வளவு முக்கியமோ, டிராவிஸ் ஹெட்டின் பங்கும் அதே அளவு முக்கியத்துவம் பெற்றிருந்தது. பல போட்டிகளில் எதிர் அணியின் பந்துகளை சிதறவிட்ட டிராவிஸ் ஹெட், 15 இன்னிங்ஸ்களில் 64 ஃபோர்களை விளாசி, ‘ஆன்-தி-கோ 4ஸ் ஆஃப் தி சீசன்’ விருதை வென்றுள்ளார்.

இவர் இந்த தொடரில் 191.55 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 567 ரன்களை குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

எலக்ட்ரிக் ஸ்ட்ரைக்கர் ஆஃப் தி சீசன் – ஜேக் பிரேசர் மெக்கர்க்

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக குறைந்த போட்டிகளிலேயே விளையாடினாலும், தான் விளையாடிய போட்டிகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ஜேக் பிரேசர் மெக்கர்க், ‘எலக்ட்ரிக் ஸ்ட்ரைக்கர் ஆஃப் தி சீசன்’ விருதை வென்றுள்ளார். 9 இன்னிங்ஸ்களில் 330 ரன்களை குவித்த இவர், 234.04 ஸ்ட்ரைக் ரேட்டில் இந்த ரன்களை விளாசியுள்ளார்.

அல்டிமேட் ஃபேன்டஸி பிளேயர் ஆஃப் தி சீசன் – சுனில் நரைன்

2024 ஐபிஎல் கோப்பையை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக பேட்டிங் & பவுலிங் என இரண்டு பிரிவுகளிலும் அசத்திய சுனில் நரைன், ‘மோஸ்ட் வேல்யுபல் பிளேயர் ஆஃப் தி சீசன்’ விருதை வென்றார். 15 போட்டிகளில் 127 டாட் பந்துகளுடன் 17 விக்கெட்களை சுனில் நரைன் கைப்பற்றியுள்ளார். அதேபோல, 33 சிக்ஸ், 50ஃபோர்களுடன் 488 ரன்களையும் விளாசியுள்ளார். மேலும் 8 கேட்ச்கள், 3 ரன்-அவுட்களையும் கைப்பற்றியுள்ளார்.

மோஸ்ட் வேல்யுபல் பிளேயர் ஆஃப் தி சீசன் – சுனில் நரைன்

முன்பு குறிப்பிட்டது போல, தனது இந்த அற்புதமான ஆட்டத்திற்காக, சுனில் நரைன் ‘மோஸ்ட் வேல்யுபல் பிளேயர் ஆஃப் தி சீசன்’ விருதையும் வென்றுள்ளார். இது ஐபிஎல் வரலாற்றில் சுனில் நரைன் வெல்லும் 3வது ‘மோஸ்ட் வேல்யுபல் பிளேயர் ஆஃப் தி சீசன்’ விருது என்பது குறிப்பிடத்தக்கது.

எமர்கிங் பிளேயர் ஆஃப் தி சீசன் – நிதிஷ் குமார் ரெட்டி

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக ஒரு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 13 போட்டிகளில் பேட்டிங்கில் 303 ரன்களை குவித்து, பந்துவீச்சில் 3 விக்கெட்களை கைப்பற்றிய நிதிஷ் குமார் ரெட்டி, இந்த தொடருக்கான ‘எமர்கிங் பிளேயர் ஆஃப் தி சீசன்’ விருதை வென்றார்.

கேட்ச் ஆஃப் தி சீசன் – ரமன்தீப் சிங்

லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், தான் பிடித்த ஒரு அற்புதமான கேட்சிற்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சேர்ந்த ரமன்தீப் சிங் ‘கேட்ச் ஆஃப் தி சீசன்’ விருதை பெற்றார்.

ஃபேர்பிளே விருது – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி

மகிழ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share