துபாயில் நடைபெற்ற மினி ஏலத்தில் ஆஸ்திரேலிய வீரர் ட்ராவிஸ் ஹெட்டை ஹைதராபாத் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.
சமீபத்தில் நடந்த உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணி கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் ட்ராவிஸ்.
இதனால் அவரை ஏலத்தில் எடுக்க சென்னை – ஹைதராபாத் அணிகள் இடையே கடும் போட்டி நடந்தது. இரு அணிகளும் சளைக்காமல் மாறி, மாறி ஏலம் கேட்டன.
Turning Heads with that bid! 🤞 pic.twitter.com/Fhksd5a324
— Chennai Super Kings (@ChennaiIPL) December 19, 2023
முடிவில் ஹைதராபாத் அணி ட்ராவிஸ் ஹெட்டை ரூபாய் 6.80 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இதைப்பார்த்த சென்னை அணி ரசிகர்கள் இன்னும் கொஞ்சம் போட்டியிட்டு, அவரை ஏலத்தில் எடுத்திருக்கலாம் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
முதல் செட் ஏலத்தில் ஹைதராபாத் அணி ஆஸ்திரேலிய வீரர் ட்ராவிஸ் ஹெட்டை 6.80 கோடி ரூபாய்க்கும் , ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரோவ்மான் பாவலை ரூபாய் 7.40 கோடிக்கும் , டெல்லி அணி இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக்கை ரூபாய் 4 கோடிக்கும் ஏலத்தில் எடுத்துள்ளன.
Mana Travis is a 𝐇YD𝐄R𝐀BA𝐃I 🔥#HereWeGOrange pic.twitter.com/SUtbRJfXZA
— SunRisers Hyderabad (@SunRisers) December 19, 2023
ட்ராவிஸ் ஹெட்டை விடவும் ரோவ்மான் பாவலை, ராஜஸ்தான் அணி கூடுதல் விலை கொடுத்து ஏலத்தில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
–மஞ்சுளா
IPL Auction 2024 : முதல் சுற்றில் விலை போகாத ஜாம்பவான்!
IPL2024: பிரீத்தி ஜிந்தா, தோனி, ரிஷப் பண்ட்… ஐபிஎல் ஏலத்துக்காக துபாயில் குவிந்த நட்சத்திரங்கள்!
