PBKS vs DC: பஞ்சாப்பின் பிளே ஆஃப் கனவை தகர்த்த டெல்லி!

Published On:

| By Monisha

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது டெல்லி அணி.

ஐபிஎல் தொடரில் நேற்று (மே 17) இரவு நடைபெற்ற 64வது லீக் போட்டியில் பஞ்சாப் – டெல்லி அணிகள் மோதின. ஏற்கனவே லீக் சுற்றுடன் வெளியேறிய டெல்லியை பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல நிச்சயம் தோற்கடிக்க வேண்டிய கட்டாயத்தில் பஞ்சாப் எதிர்கொண்டது.

ADVERTISEMENT

தரம்சாலா மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. தொடர்ந்து டெல்லி அணியில் நீண்ட நாட்களுக்கு பிறகு தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய பிரித்திவி ஷா மற்றும் கேப்டன் டேவிட் வார்னர் இருவரும் இணைந்து ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கத்தை கொடுத்தனர்.

ஆனால், 5 பவுண்டரி 2 சிக்சருடன் 46 ரன்களில் வார்னர் ஆட்டமிழந்தார். அந்த நிலைமையில் வந்த ரிலீ ரோசவ் உடன் ஜோடி சேர்ந்த பிரித்திவி ஷா 2வது விக்கெட்டுக்கு 54 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நீண்ட நாட்கள் கழித்து 7 பவுண்டரி 1 சிக்சருடன் அரை சதமடித்து 54 ரன்கள் விளாசி அவுட்டானார்.

ADVERTISEMENT

மறுபுறம் பஞ்சாப் பவுலர்களைப் பந்தாடிய ரிலீ ரோசவ் டெத் ஓவர்களில் சரமாரியாக வெளுத்து வாங்கி 6 பவுண்டரி 6 சிக்சருடன் 82 ரன்கள் குவித்து சூப்பர் பினிஷிங் கொடுத்தார். அவருடன் பில் சால்ட் தனது பங்கிற்கு 2 பவுண்டரி 2 சிக்சருடன் 26 ரன்கள் எடுத்திருந்தார்.

இதனால் 20 ஓவர் இறுதியில் 2 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்திருந்தது. பஞ்சாப் அணியின் சார்பில் அதிகபட்சமாக சாம் கரண் 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.

ADVERTISEMENT
IPL 2023 PBKS vs DC

இதனையடுத்து 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு பஞ்சாப் அணி களமிறங்கியது. ஆரம்பத்திலேயே கேப்டன் ஷிகர் தவான் கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். தொடர்ந்து களமிறங்கிய அதர்வா டைட் உடன் கை கோர்த்த மற்றொரு தொடக்க வீரர் பிரப்சிம்ரன் சிங் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 4 பவுண்டரியுடன் 22 ரன்களில் ஆட்டமிழந்து பின்னடைவை கொடுத்தார்.

அடுத்துக் களமிறங்கிய லியாம் லிவிங்ஸ்டன் அதிரடியாக விளையாடி விரைவாக ரன்களை சேர்த்தார். மறுபுறம் 15 ஓவர்கள் வரை நிலைத்து நின்று 3வது விக்கெட்டுக்கு 78 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அதர்வா டைட் 5 பவுண்டரி 2 சிக்சருடன் 55 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

அந்த நேரத்தில் கடைசி 5 ஓவரில் பஞ்சாப் அணிக்கு வெற்றி பெற 86 ரன்கள் தேவைப்பட்டது. அடுத்ததாக வந்த ஜிதேஷ் சர்மா 0, தமிழக வீரர் சாருக்கான் 6 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தையே கொடுத்தனர். அந்த நிலைமையில் மறுபுறம் லிவிங்ஸ்டன் அதிரடியாக செயல்பட்டு வெற்றிக்குப் போராடிய போதிலும் எதிர்புறம் வந்த சாம் கரண் தலா 1 பவுண்டரி சிக்சரை பறக்க விட்டு அதிரடி காட்டிய போது 11 (5) ரன்களில் ஆன்றிச் நோர்ட்ஜெ பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த ஹர்ப்ரீத் ப்ராரையும் டக் அவுட்டாக்கி மிரட்டினார் ஆன்றிச் நோர்ட்ஜெ. பரபரப்பாக சென்று கொண்டிருந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 33 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் லியாம் லிவிங்ஸ்டன் 2 சிக்ஸர் 1 பவுண்டரி அடித்து கடைசி பந்து வரை விளையாடி 94 ரன்கள் குவித்து போராடி ஆட்டமிழந்தார்.

IPL 2023 PBKS vs DC

இதனால் பஞ்சாப் அணி 20 ஓவர் இறுதியில் 8 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்து 15 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

டெல்லி சார்பில் அதிகபட்சமாக இசாந்த் சர்மா மற்றும் அன்றிச் நோர்ட்ஜெ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

இப்போட்டியில் தவான் டக் அவுட்டான நிலையில் பிரப்சிம்ரன், அதர்வா ஆகியோர் மெதுவாக விளையாடியதால் ஏற்பட்ட அழுத்தத்தில் மிடில் ஓவர்களில் லியம் லிவிங்ஸ்டன் போராடியும் இதர வீரர்கள் கைகொடுக்க தவறினர். இதனால், பரிதாபமாக தோற்ற பஞ்சாப் 13 போட்டிகளில் 7வது தோல்வியைப் பதிவு செய்தது சென்னை, மும்பை போன்ற அணிகளுக்கு சாதகமாக மாறியுள்ளது.

இந்த தோல்வியால் ராஜஸ்தான் அணிக்கு எதிரான தன்னுடைய கடைசி லீக் போட்டியில் வென்றாலும் பஞ்சாப் 90% பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்பில்லை.
மறுபுறம் ஏற்கனவே முதல் அணியாக வெளியேறிய டெல்லி 5வது வெற்றியைப் பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து 9வது இடத்திற்கு முன்னேறியது.

அத்துடன் பஞ்சாப் அணியின் பிளே ஆஃப் சுற்று கனவை சிதைத்த டெல்லி அடுத்ததாக சென்னை அணியுடன் மோதவுள்ளது.

மோனிஷா

விளைச்சல் உச்சம்: விலை குறைவு- தென்னை விவசாயிகள் கவலை!

ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share