ADVERTISEMENT

தூள் கிளப்பிய கான்வே, தூபே: பெங்களூரு அணிக்கு சவாலான இலக்கு!

Published On:

| By Monisha

ஐபிஎல் லீக் போட்டியில் பெங்களூரு அணிக்கு 227 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.

2023 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசன் லீக் போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் 24வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்வாட் மற்றும் டெவான் கான்வே களமிறங்கினர்.

ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ருதுராஜ் 3 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். இதனையடுத்து ரஹானே, கான்வே உடன் இணைந்தார். இவர்கள் இருவரும் இணைந்து சிஎஸ்கே அணிக்கு அதிரடியாக ரன்களை சேர்க்க தொடங்கினர். ஆனால் 37 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரஹானே ஆட்டமிழந்து வெளியேறினார்.

ADVERTISEMENT

மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த கான்வே 45 பந்துகளில் 83 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து 4வது விக்கெட்டிற்கு களமிறங்கிய சிவம் தூபே, அவர் பங்கிற்கு அரைசதம் விளாசி 52 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்தடுத்து களமிறங்கிய சிஎஸ்கே வீரர்கள் அனைவரும் சுமாரான ரன்களில் ஆட்டமிழக்க 20 ஓவர் இறுதியில் 6 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் எடுத்திருந்எடுத்திருந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.

ADVERTISEMENT

இதனால் 227 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கியுள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

மோனிஷா

டிஜிட்டல் திண்ணை: ரஜினி, கமல், விஜயகாந்த் செய்த தவறுகள்- விஜய் ஓப்பன் டாக்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share