பாகிஸ்தான் கிரிக்கெட் தேர்வுக்குழு தலைவர் இன்சமாம்-உல்-ஹக் திடீர் ராஜினாமா

Published On:

| By Kavi

Inzamam-ul-Haq resigns from PCB

இந்தியாவில் நடைபெறும் 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் தோல்வியடைந்து, மிக மோசமான நிலையில் உள்ள நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தேர்வுக்குழு தலைவராக உள்ள இன்சமாம்-உல்-ஹக், தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

அக்டோபர் 5 அன்று, இந்தியாவில் ஒருநாள் உலகக்கோப்பை தொடங்கிய நிலையில், ஐதராபாத்தில் நெதர்லாந்து மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கு எதிராக, தான் விளையாடிய 2 போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.

ADVERTISEMENT

ஆனால், அதை தொடர்ந்து இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளுடன் அடுத்து விளையாடிய 4 போட்டிகளிலும், பாகிஸ்தான் அணி தொடர் தோல்வியை சந்தித்துள்ளது.

இதன் காரணமாக, அந்த அணி அரையிறுதி செல்லும் வாய்ப்பு மிகவும் கடினமாகியுள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இன்சமாம்-உல்-ஹக், தாமாக முன்வந்து தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

ஒருநாள் உலகக்கோப்பை தொடரில், பாகிஸ்தான் அணியின் மோசமான செயல்பாடே அவரின் இந்த முடிவுக்கு காரணம் என கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இது ஒருபுறம் இருக்க, பாபர் அசாம், முகமது ரிஸ்வான், ஷாஹீன் ஷா அப்ரிடி உள்ளிட்ட நட்சத்திர பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு ஸ்பான்ஸர் செய்யும் ‘யாசோ இன்டர்நேஷனல் லிமிடெட்’ நிறுவனத்தில், இன்சமாம்-உல்-ஹக் ஒரு பங்குதாரராக இருப்பதாக கூறப்படுகிறது.

தேர்வுக்குழு தலைவராகவும், நிறுவனத்தின் பங்குதாரராகவும் இருப்பதால், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தேர்வில் பாகுபாடு ஏற்படலாம் என புகார் எழுந்தது.

இது குறித்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்சமாம்-உல்-ஹக் மீது விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அவரது இந்த ராஜினாமா அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முரளி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஹன்சிகா பட டீசரை வெளியிட்ட விஜய் சேதுபதி

அமர் பிரசாத் மீது குண்டாஸ்: மனைவி நீதிமன்றத்தில் மனு!

பசும்பொன்னில் எதிர்ப்பு… தொண்டர்கள் சூழ முத்துராமலிங்க தேவருக்கு எடப்பாடி மரியாதை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share