ரோகித் சர்மாவுக்கு 37 வயதாகிறது. விராட் கோலிக்கு 36 வயதாகிறது. தோனிக்கு 43 வயதாகிறது. இந்த வயதிலும் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இவர்களையெல்லாம் மிஞ்சும் வகையில் 62 வயதில் ஒருவர் சர்வதேச கிரிக்கெட் விளையாடியுள்ள தகவல் இப்போது வெளியாகியுள்ளது.International debut at 62
கடந்த மார்ச் 10 ஆம் தேதி பாக்லாந்து தீவுகள் அணியுடன் கோஸ்டாரிகா அணி டி20 ஆட்டத்தில் மோதியது. கோஸ்டாரிகா நாட்டிலுள்ள கொய்சிமா நகரில் நடந்த இந்த போட்டியில் பாக்லாந்து அணிக்காக ஆண்ட்ரூ பிரவுன்லி என்பவர் 62 வயது 145 நாட்கள் களம் இறங்கியுள்ளார். உலகிலேயே சர்வதேச டி20 போட்டியில் அதிக வயதில் களம் இறங்கியவர் இவர்தான். 60 வயதுக்கு மேல் சர்வதேச ஆட்டத்தில் களம் இறங்கிய முதல் வீரர் இவர்தான்.
இவர் மொத்தம் 3 டி20 போட்டியில் களம் இறங்கி, 6 ரன்கள் மட்டும் அடித்தார். பந்தும் வீசுவார். ஆனால், இதுவரை ஒரு விக்கெட்டையும் வீழ்த்த முடியவில்லை. International debut at 62
இவருக்கு முன்னதாக, 2019 ஆம் ஆண்டு துருக்கி வீரர் ஓஸ்மான் கோகர் 59 வயது 181 நாட்களில் ருமேனியாவுக்கு எதிரான சர்வதேச டி20 போட்டியில் களம் இறங்கியிருந்தார்.
ஒருநாள் போட்டியில் நெதர்லாந்து வீரர் என்.ஈ. கிளார்கே அதிக வயதில் களம் இறங்கியிருந்கிறார். அப்போது அவருக்கு வயது 47 ஆண்டுகள் 240 நாட்கள். டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் சவுதர்டன் அதிக வயதில் களம் இறங்கியிருக்கிறார். இந்த சமயத்தில் அவருக்கு வயது 49 ஆண்டுகள் 119 நாட்கள் ஆகும்.