7-வது நாளாகப் போராட்டம்: இடைநிலை ஆசிரியர்கள் கைது

Published On:

| By Mathi

TProtest

சென்னையில் இன்று 7-வது நாளாகப் போராட்டம் நடத்திய இடைநிலைப் பள்ளி ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.

சம வேலைக்கு சம ஊதியம் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். சென்னையில் ஆசிரியர்கள் தொடர் போராட்டங்களை நடத்துகின்றனர்.

ADVERTISEMENT

சென்னை வட்டார கல்வி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நேற்று நடைபெற்றது. இன்று 7-வது நாளாக சென்னையில் ஆசிரியர்களின் போராட்டம் நீடித்தது. இப்போராட்டத்தைக் கைவிட மறுத்ததால் ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share