மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்ரவரி 1) இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார்.
இதில் விவசாயத்துறை சார்ந்து முக்கிய அறிவிப்புகள் குறித்து நிர்மலா சீதாராமன் பேசும்போது,
“நாட்டில் விவசாயத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. கிசான் திட்டத்தின் மூலம் 11.8 கோடி விவசாயிகளுக்கு நேரடி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
கடல் உணவு ஏற்றுமதி கடந்த 10 ஆண்டுகளில் 2 மடங்காக உயர்ந்துள்ளது. ஒருங்கிணைப்பட்ட கடல்சார் பூங்கா ஐந்து இடங்களில் தொடங்கப்படும்.
விவசாயத் துறையில் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்காக அறுவடைக்குப் பிந்தைய நடவடிக்கைகளில் அரசு மற்றும் தனியார் முதலீட்டை மேலும் ஊக்குவிக்க அரசு நடவடிக்கை எடுக்கும். 4 கோடி விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
உலக அளவில் பால் உற்பத்தியில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. மீன்வளத்துறையில் 55 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…