ஹாக்கி ஆர்வம் இருக்கா? உங்களுக்காகத்தான் இந்த சிறப்புப் பயிற்சிகள்!

Published On:

| By Aara

ஊடக வெளிச்சத்தை கிரிக்கெட், குறிப்பாக ஐபிஎல் போட்டிகள் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் சத்தமில்லாமல் ஒரு சாதனைக்கான முன்னெடுப்பை செய்துகொண்டிருக்கிறது தமிழ்நாடு ஹாக்கி சங்கம்.

‘ஹாக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு’ சார்பாக மாநிலம் முழுவதிலும் உள்ள ஹாக்கி விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் ஏப்ரல் 21 ஆம் தேதி முதல் ஏப்ரல் 28 ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

சப் ஜூனியர், ஜூனியர் மற்றும் சீனியர் ஆண்களுக்கான Goal keeper மற்றும் Drag flicker பயிற்சி வகுப்புகள் சென்னையிலுள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது.’

ஒலிம்பிக் வரை விளையாடி புகழ்பெற்ற ரூபேந்திரன் பால் சிங், சிறந்த இந்திய கோல் கீப்பரான அதிரன் டிசோசா ஆகியோர் பயிற்சியளித்து வருகிறார்கள்.

மேலும் fitness and bio mechanical in hockey, team playing strategy, players psychology உள்ளிட்ட பயிற்சிகளும் இந்த சிறப்பு முகாமில் வழங்கப்படுகிறது. அதாவது ஹாக்கி விளையாடுவதற்கான உடல் மற்றும் உள்ள உறுதி, குழுவுணர்வுடன் உத்திகள் வகுப்பது, விளையாட்டுக் களத்தின் உளவியல் சக்தி மேம்படுத்துவது ஆகிய பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.

இந்த பயிற்சிக்கு இடையே இந்திய ஹாக்கி சங்கத்தின் பொருளாளரும், தமிழ்நாடு ஹாக்கி சங்கத்தின் தலைவருமான சேகர் ஜே. மனோகரன் பயிற்சி பெறும் வீரர்களை சந்தித்து, அவர்களின் பயிற்சி அனுபவம் பற்றி கேட்டறிந்ததோடு, வீரர்களுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்களையும் வழங்கி ஊக்கப்படுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஹாக்கி சங்கத்தின் இணைச் செயலாளர் கிளமென்ட், நாகப்பட்டினம் மாவட்ட ஹாக்கி சங்கத்தின் செயலாளர் சாமிநாதன் ஆகியோரோடு மின்னம்பலம் நிர்வாக இயக்குனரும் ஆசிரியருமான காமராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பயிற்சி பெறும் ஹாக்கி வீரர்களுக்கு வாழ்த்தும் ஊக்கமும் வழங்கினர்.

’ஹாக்கி விளையாட்டின் ஒவ்வொரு அம்சத்துக்கும் அளிக்கப்படும் இதுபோன்ற பிரத்யேக பயிற்சி முகாம்கள் எங்களுக்கு பெரும் உற்சாகமாக இருக்கின்றன. தேசிய அளவில் சாதனை செய்ய இதுபோன்ற முகாம்கள் பெரிதும் உதவும்’ என்கிறார்கள் பயிற்சி பெறும் வீரர்கள்.

உங்களுக்கோ உங்கள் குழந்தைகளுக்கோ ஹாக்கியில் ஆர்வம் இருக்கா… உடனே ஹாக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு- சமூக தளப் பக்கத்தில் தொடர்புகொள்ளுங்க…

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வேந்தன்

”ஓட்டு போடவில்லை என்றால் கேள்வி கேட்கும் தகுதி இல்லை” : பிரகாஷ் ராஜ்

நிர்மலா தேவி தலைமறைவு? : வழக்கு ஒத்திவைப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share