ஃபாஸ்டேக் வருடாந்திர பாஸை எப்படி வாங்க வேண்டும் பாருங்க!

By Pandeeswari Gurusamy

|

Published on 15 Aug 2025, 3:51 PM

Instructions for purchasing a FASTag annual pass

நாடு முழுவதும் இன்று (ஆகஸ்ட் 15) முதல் ஃபாஸ்டேக் வருடாந்திர பாஸ்க்கு விண்ணப்பிக்கலாம்.

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் 1,228 சுங்கச்சாவடிகள் உள்ளது. இதில் 78 சுங்கச்சாவடிகள் தமிழகத்தில் இயங்கி வருகிறது. இங்கு வாகனங்களின் அடிப்படையில் 6 வகையான கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் கடந்து செல்லும்போது நேர விரயம் ஆவதைத் தடுப்பதற்காக ஃபாஸ்டேக் திட்டத்தை மத்திய நெடுஞ்சாலை அமைச்சகம் அமல்படுத்தியது. இந்நிலையில் தேசிய நெஞ்சாலைகளில் அடிக்கடி பயணிப்பவர்கள் சுங்க வரியைச் சேமிக்க வருடாந்திர பாஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது கார்கள், ஜீப்கள், வேன்கள் போன்ற சொந்த பயன்பாட்டு வாகனங்களுக்கு மட்டும் பொருந்தும்.
இதில் ஏற்கனவே ஃபாஸ்டேக் பயன்படுத்துபவர்கள் புதிய பாஸ் வாங்க வேண்டிய கட்டாயம் இல்லை. தற்போதைய ஃபாஸ்டேக்கை பாஸை, ஆண்டு பாஸாக எளிதில் மாற்றி கொள்ளலாம்.

இத்திட்டத்தில் பயன்பெற நினைக்கும் வாகன ஓட்டிகள், Play Store பக்கத்தில் ‘ராஜ்மார்க் யாத்ரா’ என்ற நெடுஞ்சாலை துறையின் செயலியை பதிவிறக்கம் செய்து விண்ணப்பித்து பெற முடியும். NHAI என்ற இணைய தளத்திலும் வாங்கலாம். ஆனால் அதற்கு தகுதி அளவு கோல்களை பூர்த்தி செய்ய வேண்டியது கட்டாயம்.

ADVERTISEMENT
ஃபாஸ்டேக் வருடாந்திர பாஸ் வாங்கும் வழிமுறைகள்
  • இதற்கு பதிவு செய்யப்பட்ட வாகன எண், செல்போன் எண் பயன்படுத்தி உள் நுழைய வேண்டும்.
  • பின்னர் யுபிஐ, நெட் பேங்கிங், டெபிட் அல்லது கிரெடிட் கார்டு மூலம் ரூ.3000 செலுத்த வேண்டும்.
  • பணம் செலுத்திய பிறகு 2 மணி நேரத்தில் ஃபாஸ்ட்டேக் வருடாந்திர பாஸை பயன்படுத்தலாம்.
  • இதுகுறித்து மின்னஞ்சல் அல்லது குறுஞ் செய்தி மூலம் உறுதிப்படுத்தும் தகவலை பெறுவீர்கள்.
காலக்கெடு

வருடாந்திர பாஸை ஒரு வருடத்திற்குள் நீங்கள் 200 முறை பயன்படுத்தலாம். வருடம் முடிந்ததும் அது சாதாரண பாஸாக மாற்றப்படும். 200 பயணங்கள் அல்லது 1 வருடம், எது முதலில் வருகிறதோ அதுவரை மட்டுமே புதிய ஃபாஸ்டேக் வருடாந்திர பாஸ் செல்லுபடியாகும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

நீங்கள் தேவையின் பொருட்டு மீண்டும் புதுப்பித்து கொள்ளலாம். ஆனால் வணிக வாகனங்களுக்கு இந்த வசதி பொருந்தாது என்பதையும், இந்த வருடாந்திர பாஸ் மாற்றத்தக்கது இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel