உலகளவில் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் பிரபல சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் புதிய அப்டேட் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளது. அது என்னவென்றால் ப்ரெண்ட் மேப் (Friend Map) எனப்படும் லைவ் லொக்கேஷன் ஷேரிங் வசதியாகும்.
இந்த வசதியைப் பயன்படுத்தி இன்ஸ்டாகிராமில் நண்பர்களாக உள்ளவர்களுக்கு நம்முடைய லைவ் லொகேஷனை அனுப்ப முடியும். இந்த ப்ரெண்ட் மேப் வசதி பற்றி மெட்டா செய்தித் தொடர்பாளர்,”தற்போதுவரை இந்த அப்டேட் சோதனையில் உள்ளது கூடிய விரைவில் பயன்பாட்டிற்கு வரும்”, என்று தெரிவித்துள்ளார்.
ப்ரெண்ட் மேப் வசதி மூலம் நண்பராக உள்ள ஒரு நபருக்கோ அல்லது நெருங்கிய நண்பர்களை வரிசைப்படுத்தியோ லொக்கேஷன் அனுப்ப முடியும். வேறு என்னென்ன இந்த அப்டேட்டில் உள்ளது என்று பார்த்தால் கோஸ்ட் மோட்(Ghost Mode) ஆப்ஷன்கள் கிடைக்கும்.
இதை பயன்படுத்தி கடைசி ஆக்டிவ் லொகேஷனை மறைக்க முடியும் மற்றும் க்ளோஸ் ப்ரெண்ட்ஸ் ஆப்சனும் வருவதால் நெருங்கிய நண்பர்களை வரிசைப்படுத்திக் கொள்ளலாம். இத்துடன் நோட்ஸ்(Notes) இணைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
-பவித்ரா பலராமன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ்: கோடையிலும் உங்கள் சருமம் பளபளக்க…
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!