பொது சட்ட நுழைவுத் தேர்வில் (Common Law Admission Test CLAT) முதலிடம் பெற்று திருச்சி தேசிய சட்டப்பல்கலைக் கழகத்தில் உயர் கல்விக்கு தேர்வாகி உள்ள திருச்சி பச்சைமலை பழங்குடி மாணவர் பரத்துக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். Inspired by ‘Jai Bhim’: Tribal Student Excels in Common Law Admission Test!
திருச்சி பச்சமலை தோனூர் கிராமத்தைச் சேர்ந்த சேர்ந்த பழங்குடி மாணவர் பரத், பொது சட்ட நுழைவுத் தேர்வில் இந்திய அளவில் 964 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார். திருச்சி தேசிய சட்டப் பல்கலைக் கழகத்தில் உயர்கல்விக்கு தகுதி பெற்றுள்ள முதல் பழங்குடி மாணவர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
மாணவர் பரத்துக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், உள்ளம் உவகையில் நிறைகிறது! தம்பி பரத் அவர்கள் சட்டம் பயின்று தன் அறிவொளியை இந்தச் சமூகத்துக்கு வழங்கிட வேண்டும் என வாழ்த்துகிறேன். அவரது சட்டப் படிப்புக்குத் தி.மு.க. சட்டத்துறையும் – அதன் செயலாளர் என்.ஆர்.இளங்கோ அவர்களும் துணை நின்று அவரை வழிநடத்துவார்கள்! என்றார்
மாணவர் பரத்தின் தந்தை கூறுகையில், ஜெய்பீம் திரைப்படம் பார்த்து மகனை சட்டப் படிப்பு படிக்க வைத்தேன். இன்று தேசிய சட்டப் பல்கலைக் கழகத்தில் உயர் கல்வி படிக்க தேர்ச்சி பெற்றுள்ளார் என்றார்.