ஓடவும் முடியாது… ஒளியவும் முடியாது… வந்தாச்சு ஐ.என்.எஸ் நீலகிரி… ஸ்பெஷல் என்ன தெரியுமா?

Published On:

| By Kumaresan M

இந்தியாவிலேயே அதி நவீன போர்க்கப்பலான ஐ.என்.எஸ் நீலகிரி தனது சோதனை பயணத்தை வெற்றிக்கரமாக நிறைவு செய்துள்ளது.

இந்திய கடற்படையில் பல நவீன கப்பல்கள் இருந்தாலும் அவற்றில் இருந்து முற்றிலும் வேறு பட்டது ஐ.என்.எஸ் நீலகிரி. பொதுவாக கடற்படை கப்பல்களில் சிறிய ரக போர்க்கப்பல்   (Frigate) அழிக்கும் ரக கப்பல்கள் (destroyers)என இரு வகைகள் உள்ளன.

சிறிய ரக போர்க்கப்பல்கள் அனைத்து நாட்டு கடற்படையிலும் இருக்கும். ஆனால், அழிக்கும் வகை போர்க்கப்பல்கள் 14 நாடுகளிடம் தான் உள்ளன.

பீரங்கி போர்க்கப்பல்கள் 130 முதல் 150 மீட்டர் நீளமும் அழிக்கும் ரக போர்க்கப்பல்கள் 150 முதல் 160 மீட்டர் நீளமும் கொண்டவை. ப்ரீகேட் ரக போர்க்கப்பல் மணிக்கு 30 நாட் (56 கி.மீ )வேகத்திலும் அழிக்கும் ரக போர்க்கப்பல் மணிக்கு 20 முதல் 30 நாட்(37 முதல் 56 கி.மீ )வேகத்திலும் செல்லக் கூடியவை.

இரு கப்பல்களிலுமே நவீன ஆயுதங்கள் உண்டு. இதில், பிரிகேட் ரக கப்பல்கள் சட்டென்று தாக்குதலுக்கு தயாராகும் வகையை சேர்ந்தவை. எனவே, இந்த ரக கப்பல்களை அதிகமாக தயரிக்க முடிவு செய்யப்பட்டு 45 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது.

தொடர்ந்து, nilgiri class அல்லது Shivalik-class frigate என பெயரிடப்பட்ட  புதிய சிறிய நவீன கப்பல்கள் தயாரிக்கும் பணி மும்பை மஜ்கான் யார்டு கப்பல் கட்டும் தளத்தில் தொடங்கியது.

இந்த ரக கப்பல்கள் மணிக்கு 59 கி.மீ வேகத்தில் செல்லக் கூடியவை. இந்திய கடற்படையிலேயே அதிக வேகம் கொண்ட கப்பல்கள் இவைதான். nilgiri -class frigate ரகத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஐ.என்.எஸ் நீலகிரி கப்பலின் கட்டுமானம் ஆரம்பிக்கப்பட்டது.

தற்போது, கட்டுமானம் முடிந்து முதன்முறையாக கடலில் சோதனை பயணத்தை வெற்றிக்கரமாக நிறைவு செய்துள்ளது,. பல கட்ட சோதனை பயணத்துக்கு பிறகு, இந்த கப்பல் இந்திய கடற்படையில் சேர்க்கப்படும். இந்த ரகத்தில் 8 கப்பல்கள் கட்டப்படவுள்ளன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

டிஜிட்டல் திண்ணை: அமெரிக்கா புறப்பட்ட ஸ்டாலின்… துரைமுருகன் ஏர்போர்ட் சென்ற பின்னணி!

மேற்கு வங்கத்தில் பாஜக பந்த்: ஹெல்மெட்டுடன் பேருந்து ஓட்டும் டிரைவர்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share