ரிலாக்ஸ் டைம்: இஞ்சி லேகியம்!

Published On:

| By Balaji

பொங்கல் நல்வாழ்த்துகள். மதிய நேரத்தில் கொழுப்புச்சத்து மிக்க உணவுகள், மாமிச வகை உணவுகள் போன்றவற்றை உட்கொள்ள நினைப்பவர்கள், செரிமானப் பிரச்னைகளைத் தவிர்க்க, சாப்பிடுவதற்கு முன்னர் ரிலாக்ஸ் டைமில் சிறிதளவு தீபாவளி லேகியம் போல் இந்த இஞ்சி லேகியம் சாப்பிடலாம். இன்றைய நாளை புத்துணர்ச்சி நாளாக்கலாம்.

**எப்படிச் செய்வது**

ADVERTISEMENT

100 கிராம் இஞ்சி, ஆறு பூண்டு பற்களைக் கழுவி, தோலுரித்து நறுக்கிக்கொள்ளவும். மிக்ஸியில் இரண்டு டீஸ்பூன் தனியாவைச் (மல்லி) சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பிறகு இஞ்சி, பூண்டு, கால் கப் உலர் திராட்சை, கால் கப் வெல்லம், சிறிது தண்ணீர் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து மூன்று டேபிள்ஸ்பூன் நெய், அரைத்த விழுதைச் சேர்த்து நன்றாகக் கிளறவும். நெய் பிரிந்து வரும்வரை கிளறி இறக்கவும். ஆறியவுடன் ஈரமில்லாத கண்ணாடி பாட்டிலில் எடுத்துவைக்கவும். எடுத்துச் சாப்பிடும்போது ஈரமில்லாத ஸ்பூனை உபயோகிக்கவும்.

**சிறப்பு**

ADVERTISEMENT

ஆயுர்வேத சிகிச்சைகளின் பெரும்பாலான மருந்துகளில் சேர்க்கப்படும் இயற்கை மருந்துப் பொருள் இஞ்சி. வயிற்று உப்புசம், ஜலதோஷம், இரைப்பை வீக்கம் போன்ற பிரச்சினைகளுக்கு இந்த இஞ்சி லேகியத்தை சாப்பிட்டு வருவது நல்ல தீர்வைத்தரும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share