சந்தானம் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்.! காரணம் என்ன?

Published On:

| By Minnambalam Login1

நடிகர் சந்தானம் நடிப்பில் ரிலீசுக்கு தயாராக உள்ள படம் “இங்க நான் தான் கிங்கு”. விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான “இந்தியா பாகிஸ்தான்” திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ஆனந்த் நாராயண் அவர்கள் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் அன்புச் செழியன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் வெளியான “இங்க நான் தான் கிங்கு” படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

வரும் மே 10 தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.

மே 10 ஆம் தேதி கவின் நடிப்பில் உருவாகி உள்ள ஸ்டார் படத்துடன் சந்தானத்தின் “இங்கு நான் தான் கிங்கு” திரைப்படம் மோதும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது “இங்கு நான் தான் கிங்கு” படம் மே 17 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மே 3 ஆம் தேதி வெளியான அரண்மனை 4 படத்தை பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்குகளுக்கு வருவதால் அடுத்த வாரமும் இந்த படத்தை தொடர திரையரங்கு உரிமையாளர்கள் விரும்புகின்றனர். இதனால் நடிகர் சந்தானத்தின் “இங்கு நான் தான் கிங்கு” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மே 10 ஆம் தேதியில் இருந்து மே 17 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

திருமணத்திற்காக ஏங்கும் சந்தானத்திற்கு ஒரு கட்டத்திற்கு மேல் அவர் எதிர்பார்க்கும் வகையில் பெண் கிடைத்து திருமணம் நடக்கிறது. ஆனால் அந்த திருமணத்திற்கு பின் மனைவியின் குடும்பத்தினரால் ஏற்படும் பிரச்சனைகள் ஒரு புறம் இருக்க, மற்றொருபுறம் தீவிரவாத கும்பலுக்கும் சந்தானத்திற்கும் தொடர்பு உள்ளதாக பரவும் செய்தி என பல பிரச்சனைகளை சந்தானம் எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இந்த பிரச்சனைகள் எல்லாம் ஹீரோ சந்தானம் எப்படி சமாளித்தார் என்பதே இந்த படத்தின் கதை.

முழு நீள நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகர் சந்தானத்திற்கு ஜோடியாக நடிகை பிரியாலயா நடித்துள்ளார். நடிகர்கள் தம்பி ராமையா, விவேக் பிரசன்னா, முனீஸ்காந்த், பால சரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

டிடி ரிட்டன்ஸ் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான கிக், பில்டப், வடக்குபட்டி ராமசாமி ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை தராத நிலையில் “இங்க நான் தான் கிங்கு” திரைப்படமாவது சந்தானத்தின் வெற்றி பாதைக்கு வழியாக அமையுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிளஸ் 2 ரிசல்ட்: வெற்றி பெற்ற திருநங்கை மாணவி!

பிளஸ் டூ ஃபெயிலா? கவலைப்படாதே சகோதரா… உனக்கும் ‘கவுன்சிலிங்’ உண்டு!

திடீரென சீரியலில் இருந்து வெளியேறிய நடிகை… காரணம் இதுதான்… அவரே வெளியிட்ட பதிவு..!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share