uகொரோனா: அலுவலகத்தையே காலி செய்த இன்ஃபோசிஸ்!

Published On:

| By Balaji

கர்நாடகாவில் கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார். பெங்களூருவுக்கு அமெரிக்காவிலிருந்து வந்த டெல் நிறுவன ஊழியருக்கும், அமெரிக்காவிலிருந்து லண்டன் வழியாக வந்த மற்றொரு ஐடி ஊழியருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில் மாநிலத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதனால் அமேசான், ஸ்விக்கி ஆகிய நிறுவனங்கள் தங்களது பெங்களூரு கிளையில் பணிபுரியும் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் கொரோனா அச்சம் காரணமாக அலுவலகத்தையே காலி செய்திருக்கிறது பிரபல ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ்.

இதுதொடர்பாக பெங்களூரு இன்ஃபோசிஸ் மேம்பாட்டு மையத் தலைவர் குருராஜ் தேஷ்பாண்டே வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”IIPM கட்டிடத்தில் பணிபுரியும் குழு உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாகத் தகவல் வந்துள்ளது. ஒருவேளை கோவிட் 19 வைரசால் பாதிக்கப்பட்ட அந்த நபர் எங்களுக்கு அருகாமையில் கூட இருந்திருக்கலாம். இதனால் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாங்கள் ஐ.ஐ.பி.எம் கட்டிடத்தை விட்டு வெளியேறுகிறோம். தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரிக்கை மற்றும் சிறப்பாகத் தயாராக இருப்பதை உறுதி செய்ய அமைதியாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை என்பது எங்கள் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மட்டுமே என்பதை நினைவில் கொள்க, எங்கள் பாதுகாப்பிற்கான இடத்தை நாங்கள் சுத்தப்படுத்துவோம் என்று அந்த அறிவிப்பில் தேஷ்பாண்டே குறிப்பிட்டுள்ளார். பெங்களூருவில் பல இடங்களில் இன்ஃபோசிஸுக்கு அலுவலகம் உள்ள நிலையில் IIPM கட்டிடத்தில் இருக்கும் அலுவலகத்தை காலி செய்திருக்கிறது இன்ஃபோசிஸ்.

**கவிபிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share