இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சி 1977 ஆம் ஆண்டு உருவானது. முதன்முறையாக 1998 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை பாரதிய ஜனதா கட்சி இந்தியாவில் முழுமையாக 5 வருடங்கள் ஆட்சியில் இருந்தது.
பிரதமர் வாஜ்பாய் 5 ஆண்டுகள் பிரதமராக இருந்தார். அத்வானி துணை பிரதமராக இருந்தார். அடுத்து 2004 மற்றும் 2009 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை.
இந்த தருணத்தில் பாரதிய ஜனதா கட்சியின் பிரதம வேட்பாளராக அத்வானி கருதப்பட்டார்.
அடுத்தடுத்த இரு பொது தேர்தல்களில் வெற்றி பெற முடியாமல் போனதால், பாரதிய ஜனதா கட்சி துவண்டு போய் கிடந்தது.
2014 ஆம் ஆண்டு பொது தேர்தலில் வெற்றி பெற்றேயாக வேண்டுமென்ற கட்டாயத்தில் அந்த கட்சி இருந்தது. இந்த காலக்கட்டத்தில் பிரதமர் மோடி குஜராத்தின் முதல்வராக பாரதிய ஜனதா கட்சிக்குள் மிக பிரபலமாக இருந்தார்.
அத்வானிக்கு மாற்றாக பாரதிய ஜனதா கட்சியின் இளம் தலைவர்கள் மோடியை கருதினர்.
எனவே, பிரதமர் வேட்பாளர் குறித்து முடிவெடுக்க பாரதிய ஜனதா கட்சியின் மத்தியக்குழுவும், நாடாளுமன்ற குழுவும் மோடிக்கு தீர்க்கமான ஆதரவை கொடுத்துள்ளன.
இப்படிதான் பிரதமர் மோடி பாரதிய ஜனதா கட்சியில் பிரதம வேட்பாளராக மாறியுள்ளார்.
இந்த நிலையில், மாத்ருபூமி நாளிதழுக்கு பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான முன்னாள் குடியரசு துணை தலைவர் வெங்கைய நாயுடு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது,
‘வாஜ்பாய் ஆட்சிக்கு பிறகு, இரு முறை எங்களால் பதவிக்கு வர முடியவில்லை. இதனால், கட்சி பலம் இழந்து விடும் என்று கருத்து நிலவியது.
எனவே, பல இளம் தலைவர்கள் மோடிக்கு ஆதரவாக திரும்பி விட்டனர். கோவாவில் நடந்த கட்சியின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த தகவலை நான்தான் அத்வானியிடம் கூறினேன்.
அத்வானி எனக்கு தந்தை மாதிரி. இந்த தகவலை நான் அவரிடத்தில் சொன்ன போது, மிகுந்த வேதனைப்பட்டேன்.
ஆனால், அத்வானி அதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை’ என்று கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
–எம்.குமரேசன்
மதச்சார்பின்மையைப் பேணிக்காத்தவர் வாஜ்பாய்… ஸ்டாலின் புகழாரம்!
ராமதாஸின் வன்னியர் பாசம்… அன்புமணியை தலைவராக்கியது ஏன்? – சிவசங்கர் கேள்வி!
டங்ஸ்டன் சுரங்கம் மறுஆய்வு: அண்ணாமலை வரவேற்பு… எச்சரிக்கும் சு.வெங்கடேசன்