கிண்டல் செய்த கேப்டனுக்கு பிளாஷ்பேக்கை வைத்து கோலி பதிலடி கொடுத்த சம்பவம் 2-வது டெஸ்ட் போட்டியில் நிகழ்ந்துள்ளது.
இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடர் தற்போது தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது.
இதில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் போது, தென் ஆப்பிரிக்கா கேப்டன் டீன் எல்கர்-விராட் கோலி மத்தியில் நடைபெற்ற உரையாடல் தற்போது வைரலாகி வருகிறது.
தேநீர் இடைவேளைக்கு முன், மார்கோ யான்சன் வீசிய பந்து கோலியின் பேடில் பட்டது. யான்சன் மற்றும் சக தென்னாப்பிரிக்க வீரர்கள் கடுமையாக அப்பீல் செய்தபோதும், நடுவர் அவுட் வழங்கவில்லை.
இதனையடுத்து கேப்டன் டீன் எல்கர் டிஆர்எஸ் எடுத்தார். மூன்றாவது நடுவர், அந்த டிஆர்எஸை ரிவியூ செய்தபோது, பந்து ஸ்டெம்பில் அடித்தாலும், அது அம்பயர்ஸ் கால் அளவுக்குதான் இருந்தது. இதனால், அவுட் வழங்கப்படவில்லை.
Virat Kohli to Dean Elgar:
"this was way higher than what Ravi Ashwin bowled to you". pic.twitter.com/Zc24suuAFM
— Mufaddal Vohra (@mufaddal_vohra) January 3, 2024
இதையடுத்து கோலியின் அருகில் சென்ற எல்கர், ‘சிறிய வித்தியாசம் காரணமாக நீங்க தப்பிச்சீங்க’ என கோலியை சீண்டினார்.
இதற்கு கோலி ”2021-ம் ஆண்டு நீங்கள் அஸ்வினுக்கு எதிராக ஆட்டமிழந்ததைவிட, பந்து சற்று உயரமாக சென்று விட்டது” என கலாய்த்தார்.
2021-ம் ஆண்டில் நடைபெற்ற இந்தியா-தென்னாப்பிரிக்கா டெஸ்டில் இரண்டு முறை டீன் எல்கர் விக்கெட்டை எல்பிடபிள்யு முறையில் எடுத்தார். கோலி இதைக் குறிப்பிட்டு தான் எல்கரை கலாய்த்தார்.
Virat Kohli to Elgar reminding him of deeds pic.twitter.com/mXFIgwODlE
— AP (@AksP009) January 3, 2024
இந்த உரையாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள், ”என்ன ஒரு ஞாபக சக்தி” என கோலியை பாராட்டி வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
–மஞ்சுளா
காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா
