Video: அடிச்ச அடியில இப்படி நொறுங்கி போச்சே… மன்னிப்பு கேட்ட ரிங்கு சிங்!

Published On:

| By Manjula

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் ரிங்கு சிங், தன்னுடைய சர்வதேச முதல் அரை சதத்தை எட்டினார்.

முதல் டி20 போட்டி மழையால் ரத்தான நிலையில் நேற்று(டிசம்பர் 12) இரண்டாவது டி20 போட்டி செயிண்ட் ஜார்ஜ் பூங்காவில் நடைபெற்றது.

இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 19.3 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்களை எடுத்தது. இந்திய அணி சார்பில் இளம் வீரர் ரிங்கு சிங் (69), கேப்டன் சூர்யகுமார் யாதவ்(56) இருவரும் அரை சதம் கடந்தனர்.

இந்த அரை சதம் மூலம் சூர்யகுமார் சர்வதேச டி20 போட்டிகளில் 2000 ரன்களை கடந்து, கோலி சாதனையை சமன் செய்தார்.

கோலி போல சூர்யாவும் குறைந்த இன்னிங்ஸ்களில் (56) 2000 ரன்களை கடந்துள்ளார். மறுபுறம் ரிங்கு (26) தன்னுடைய முதல் சர்வதேச அரை சதத்தை அடித்தார்.

போட்டிக்கு நடுவே மழை குறுக்கிட்டதால் இரண்டாவதாக தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங் செய்த போது, DLS முறையில் ஓவர்கள் 15 ஆக குறைக்கப்பட்டது.

ஒருபுறம் அந்த அணி தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தாலும் கூட 13.5 ஓவர்களிலேயே இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்த டி20 தொடரில் 1-௦ என முன்னிலையும் பெற்றுள்ளது.

இந்த நிலையில் போட்டிக்கு நடுவில் ரிங்கு அடித்த சிக்ஸ் ஒன்று ஸ்டாண்டில் இருந்த மீடியா பாக்ஸின் கண்ணாடியை உடைத்தது. கேப்டன் மார்க்ரம் 19-வது ஓவரை வீச, இதில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்களை ரிங்கு விளாசினார்.

முதல் சிக்ஸ் பார்வையாளர்கள் மத்தியில் விழுந்தது. அதைவிட வேகமாக அடிக்கப்பட்ட இரண்டாவது சிக்ஸர் மீடியா பாக்ஸின் கண்ணாடியை உடைத்துள்ளது.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக, போட்டிக்கு பின் இதுகுறித்த கேள்விக்கு சிரித்துக்கொண்டே ரிங்கு அதற்காக மன்னிப்பு கேட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை தன்னுடைய எக்ஸ் தளத்தில் பகிர்ந்த கொல்கத்தா அணி, ”ரிங்கு சிங் இங்கே இருக்கிறார்” என பெருமையுடன் தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மஞ்சுளா

இணையத்தில் ட்ரெண்டாகும் ‘Thala For A Reason’: காரணம் என்ன?

’மவுனம்’ காக்கும் சூர்யா… மறக்காமல் நன்றி சொன்ன அமீர்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share