இந்திய ரசிகர்களை அமைதி ஆக்குவதே எங்களது லட்சியம் என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நாளை மதியம் (நவம்பர் 19) நடைபெற போகும் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் எந்த அணி கோப்பை வெல்ல போகிறார்கள்? என்பது தான் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் மத்தியில் இருக்கக்கூடிய மிகப்பெரிய கேள்வி.
இதுவரை 10/10 என விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வென்று இந்திய அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. ஆஸ்திரேலிய அணி 8 போட்டிகளில் வென்று இந்தியாவுடன் இறுதிப்போட்டியில் மோதவுள்ளது. ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி 3-வது முறை கோப்பை வெல்லுமா? என ரசிகர்கள் டென்ஷனில் நகம் கடித்து காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் இந்திய ரசிகர்களை அமைதி ஆக்குவோம் என ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், ”நாளை மைதானம் முழுவதும் இந்திய ரசிகர்கள் தான் நிறைந்திருப்பர். ஒரு பெரிய கூட்டத்தை எங்களது ஆட்டத்தால் ஆர்ப்பரிப்பு இல்லாமல் அமைதி ஆக்குவதை விட திருப்தியான விஷயம் இல்லை. முழு பலத்தோடு ஆடாமலேயே எங்களால் வெற்றிக்கான வழிகளை தேட முடிகிறது” என்றார்.
மேலும் கோலி, ரோஹித்தை வீழ்த்த சில வழிகள் வைத்திருப்பதாக கூறிய கம்மின்ஸ், ஷமி தங்களுக்கு மிகவும் சவாலான வீரராக இருப்பார் என்பதையும் ஒப்பு கொண்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-மஞ்சுளா
சென்னை உயர்நீதிமன்றத்தின் அனைத்து கதவுகளும் மூடப்படுகிறது!
சூரனை வதம் செய்த முருகப்பெருமான்: திருச்செந்தூரில் விண்ணை பிளந்த அரோகரா கோஷம்!
