”நாங்களும் கோயம்புத்தூர்தான்”: முதல் கோவை- அபுதாபி விமானத்தில் எழுந்த தமிழ் குரல்!

Published On:

| By Kumaresan M

Indigo commences new service to abudhabi - coimbatore

கோவை – அபுதாபி இடையே நேற்று (ஆகஸ்ட் 10) முதல் விமானப் போக்குவரத்து தொடங்கியது. விமானம் கோவையில் இருந்து அபுதாபி புறப்படும் முன்பு, விமானத்தின் கேப்டன்கள் தாங்கள்  இருவரும் கோயம்புத்தூரரை சேர்ந்தவர்கள் என்பதால் மிகவும் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உணர்வதாக  தமிழில் பேசிய  வீடியோ வைரலாகி வருகிறது.

கோவையில் இருந்து கொழும்பு, சிங்கப்பூர் மற்றும் ஷார்ஜா நகரங்களுக்கு  விமான சேவை உள்ளது. அடுத்த கட்டமாக கோவை – அபிதாபி இடையே நேற்று முதல் விமான  சேவை தொடங்கப்பட்டுள்ளது. அபுதாபியில் இருந்து கோவைக்கு நேற்று காலை 163 பயணிகளுடன் இன்டிகோ விமானம் வந்தது. இந்த விமானத்துக்கு கோவை விமான நிலையத்தில்  தண்ணீரை பீய்ச்சி அடித்து வரவேற்பு  அளிக்கப்பட்டது.

பின்னர்  காலை 7.40 மணியளவில் இண்டிகோ விமானம் கோவை விமான நிலையத்தில் இருத்து அபுதாபிக்கு  புறப்பட்டது.  அபுதாபி புறப்படும் முன்பு கேப்டன் விவேக் கந்தசாமி, துணை கேப்டன் வினோத் குமார் சந்திரன் ஆகியோர் பேசினர். அப்போது, தாங்கள்  இருவரும் கோயம்புத்தூரை சேர்ந்தவர்கள்  என்பதால் மிகவும் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளதாகவும் தமிழில் பேசினர். இந்த  வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோவையில் இருந்து அபுதாபிக்கு வாரத்தில் செவ்வாய், வியாழன், சனி ஆகிய மூன்று நாட்கள் விமான  தொடங்கப்பட்டுள்ளது. இந்த விமான சேவை தொழில் துறையினர் மத்தியில் நல்ல  வரவேற்பைப்  பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, மேலும்  சில சர்வதேச நகரங்களுக்கும் கோவையில் இருந்து விமானங்களை இயக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் வலு பெற்றுள்ளது.

எம்.குமரேசன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சுதந்திர தினவிழா… தமிழகம் முழுவதும் காங்கிரஸ் இருசக்கர வாகன பேரணி!

பாகிஸ்தான் வீரர் அர்ஷத் புதிய ஈட்டி வாங்க உதவிய நீரஜ் சோப்ரா… பார்டரை தாண்டிய நட்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share