இந்தியாவின் PSLV C-61 திட்டம் விண்ணில் ஏவப்பட்ட நிலையில் 3-வது கட்டத்தில் தோல்வி அடைந்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
ஆந்திராவின் ஶ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று அதிகாலை 5.59 மணிக்கு PSLV C-61 ராக்கெட், புவி கண்காணிப்பு செயற்கைக்கோளுடன் விண்ணில் ஏவப்பட்டது. புவி கண்காணிப்புக்காக அதிநவீன செயற்கைக்கோளை இஸ்ரோ உருவாக்கி இருந்தது.

இந்த செயற்கைக்கோள் இன்று அதிகாலை PSLV C-61 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. ராக்கெட் ஏவப்பட்ட நிலையில் முதல் 2 அடுக்குகள் வெற்றிகரமாக பிரிந்தன. ஆனால் 3-வது அடுக்கு பிரிவில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் இத்திட்டம் தோல்வி அடைந்துவிட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
