ஆண்டுக்கு 100 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டும் 3 ரயில்கள்… பட்டியல் வெளியீடு!

Published On:

| By Kumaresan M

உலகின் மிகப் பெரிய ரயில்வே நெட்வொர்க்கான இந்திய ரயில்வேயில் நாள் ஒன்றுக்கு 13, 452 ரயில்கள் இயக்கப்படுகின்றன. தினமும் 2 கோடி பேர் இந்த ரயில்களில் பயணிக்கின்றனர். அந்த வகையில், இந்தியாவில் அதிக வருவாய் ஈட்டும் ரயில்களின் பட்டியலை இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது.

ராஜ்தானி, சதாபதி, வந்தேபாரத், துரோந்தோ ரயில்கள் உள்ளடக்கிய இந்த பட்டியலில் டெல்லியில் இருந்து பெங்களூருக்கு இயக்கப்படும் ஹஸ்ரத் நிஜாமுதீன் ராஜ்தானி எக்ஸ்பிரஸ்  முதலிடத்தை பிடித்துள்ளது .இந்த ரயில் ஆண்டுக்கு 176 கோடியே 6 லட்சத்து 66 ஆயிரம் வசூல் செய்கிறது. ஆண்டுக்கு 5 லட்சத்துக்கு 9 ஆயிரம் பயணிகள் இதில், பயணிக்கின்றனர். கடந்த 1992 ஆம் ஆண்டு இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டது. கிட்டத்தட்ட 33 மணி நேரத்தில் டெல்லியில் இருந்து பெங்களூருவுக்கு வந்தடையும் இந்த ரயிலின் டாப் ஸ்பீடு 130 கிலோ மீட்டர் ஆகும்.

இரண்டாவது இடத்தில் டெல்லி- கொல்கத்தா இடையே ஓடும் சீல்டா ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் பெறுகிறது. ஆண்டுக்கு 5,லட்சத்து 9 ஆயிரம் பயணிகள் இந்த ரயிலில் பயணிக்கின்றனர். வருவாய் 128 கோடியே 89 லட்சத்து 69 ஆயிரம் ஆகும். கடந்த 2000 ஆம் ஆண்டு இந்த ரயில் அறிமுகப்படுத்தப்பட்டது. 17 மணி நேரத்தில் இந்த ரயில் கொல்கத்தா சென்றடையும். 140 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த ரயில் பறக்கும்.

மூன்றாவது இடத்தில் டெல்லி – அஸாம் மாநிலம்  திப்ரூகர் இடையே ஓடும் திப்ரூகர்  ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் பெறுகிறது. இந்த ரயில் ஆண்டுக்கு 126 கோடியே 29 லட்சத்து 9 ஆயிரம் வசூலிக்கிறது. 37 மணி நேரம் பயணிக்கும் இந்த ரயில் 1996  ஆம் ஆண்டு அஸாம் தலைநகர் கவுகாத்திக்கு இயக்கப்பட்டது. பின்னர், திப்ரூகர்  வரை நீட்டிக்கப்பட்டது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – பூசம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – புனர்பூசம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share