கடந்த ஆண்டு ஜுன் மாதத்தில் சர்வதேச கால்பந்தில் இருந்து இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ஓய்வு பெற்றார். இந்த நிலையில், ஆசிய கோப்பை தகுதி சுற்று ஆட்டத்தை முன்னிட்டு, இந்திய அணியின் பயிற்சியாளர் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் ஓய்வுக்கு விடை கொடுத்து விட்டு, மீண்டும் சர்வதேச ஆட்டத்தில் பங்கேற்க 40 வயதான சுனில் சேத்ரி ஒப்புக் கொண்டார். India’s first win in 16 months
இந்த நிலையில், நேற்று ஷில்லாங்கில் நடந்த நட்புரீதியிலான ஆட்டத்தில் இந்திய அணி மாலத்தீவு அணியுடன் மோதியது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 3 கோல்கள் அடித்து வெற்றி பெற்றது. சுனில் சேத்ரியும் தன் பங்குக்கு 77 வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். சர்வதேச கால்பந்து போட்டியில் சுனில் சேத்ரி அடிக்கும் 95வது கோல் இதுவாகும்.
மாலத்தீவு அணியால் பதிலுக்கு ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. கடந்த 2023 ஆம் ஆணடு நவம்பர் மாதத்துக்கு பிறகு, இந்திய அணி சர்வதேச கால்பந்து ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளது. 16 மாதங்களுக்கு பிறகு கிடைத்த இந்த வெற்றியால் வீரர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.India’s first win in 16 months
அடுத்து, இந்திய அணி வரும் 25 ஆம் தேதி ஆசியக் கோப்பை தகுதி சுற்று ஆட்டத்தில் வங்கதேச அணியுடன் இதே மைதானத்தில் மோதுகிறது. இந்த வெற்றி குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் மனேலா மார்க்கஸ் கூறுகையில், ‘இந்த வெற்றி வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் முழு முனைப்புடன் ஆடி வெற்றி பெறும் ஊக்கத்தை அளித்துள்ளது ‘என்று தெரிவித்துள்ளார்