வந்தாச்சு இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் : எங்கே முதலில் ஓடுகிறது?

Published On:

| By Kumaresan M

இந்தியாவில் ஹைட்ரஜன் ரயில் திட்டம் ரூ.2800 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது.

ஒரு ரயில் தயாரிக்க ரூ.80 கோடி வரை செலவாகிறது.  ஹைட்ரஜன் உற்பத்தி மற்றும் பாதுகாப்பு மையங்களுக்காக ரூ.600 கோடி செலவிடப்படுகிறது.

ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்வீடன் , சீனா , தென் கொரியா, நெதர்லாந்து போன்ற நாடுகளில் ஹைட்ரஜன் ரயில்கள்  இயங்குகின்றன. இந்த வரிசையில்  இந்தியா இணைகிறது. சென்னையிலுள்ள ஐ.சி.எப்-ல் தான் இந்த ரயில் வடிவமைக்கப்படவுள்ளது.

வரும் டிசம்பர் மாதத்தில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது வடக்கு ரயில்வேயின் ஹரியானாவில் உள்ள ஜிந்த் – சோனிபட் ஆகிய நகரங்கள் இடையே 89 கிலோமீட்டர் தொலைவுக்கு முதல் ஹைட்ரஜன் ரயில் இயக்கப்படவுள்ளது.  2030 ஆம் ஆண்டுக்குள் 35 ஹைட்ரஜன் ரயில்கள் தயாரிக்கப்படவுள்ளன என்று ரயில்வே வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ரயிலில்  Fuel Cells பயன்படுத்தி ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் மூலம் மின்சாரம் உருவாக்கப்பட்டு ரயில் இயக்கப்படும். இது சுற்றுச்சூழலை மாசுபடுத்தாது. ஆனாலும் கூட இந்த ரயில் இயங்க வைக்க ஹைட்ரஜன் உற்பத்திக்கு  ஒரு மணிநேரத்துக்கு 40 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தேவைப்படலாம்.

கிட்டத்தட்ட 1000 கிலோ மீட்டர் தொலைவு வரை இந்த ரயிலை இயக்க முடியும். முதலில் மணிக்கு 90 கி.மீ வேகத்தில் இயக்கப்படும். படிப்படியாக ரயிலின் வேகம் 140 கி.மீ வேகத்துக்கு உயர்த்தப்படும்.

நீலகிரி மலை ரயில், டார்ஜிலிங் ரயில் போன்றவை ஹைட்ரஜன் ரயிலுக்கு மாற்றப்படலாம். ஆனால், இந்த வகை ரயில்களை இயக்க அதிக செலவு பிடிப்பதால்,  டிக்கெட் விலையும் அதிகமாக இருக்கும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

கிண்டி அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து… எடப்பாடி, அன்புமணி கண்டனம்!

என் மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை அழித்த மும்மூர்த்திகள்- சஞ்சு சாம்சன் தந்தை காட்டம்!

 

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share