பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸில் உள்ள விமான நிலையம் மற்றும் மெட்ரோ ரயில் நிலையத்தில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததில் 34 பேர் பலியாகினர்.
உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய இந்த குண்டுவெடிப்பால் தங்கள் உறவினர்கள் பாதிக்கப்பட்டிருப்பார்களோ என்று இந்தியாவில் உள்ளவர்கள் கவலை கொண்டனர்.
இதையடுத்து, அங்கு சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இதற்காக, 3 சிறப்பு விமானங்களை பெல்ஜியத்துக்கு அனுப்பிவைத்தது. அதில், ஒரு விமானம் இன்று காலை 5.30 மணிக்கு டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. சொந்த நாட்டுக்குத் திரும்பிய 70 இந்தியர்களை அவர்களது உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர்.
