மீண்டும் களமிறங்கும் மிதாலி ராஜ்!

விளையாட்டு

மகளிர் ஐபிஎல் போட்டியில் விளையாட மிதாலி ராஜ் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் ஜூன் 28 ஆம் தேதி அறிவித்தார். இந்திய மகளிர் அணிக்காக 12 டெஸ்டுகள், 232 ஒருநாள், 89 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். கடைசியாக இந்திய அணி பங்கேற்ற 50 ஓவர் உலகக் கோப்பைப் போட்டியில் அவர் விளையாடினார்.

மிதாலி ராஜின் வாழ்க்கை வரலாற்றுப் படமாக சபாஷ் மித்து ( ஜூலை 15 ) ஆம் தேதி வெளியானது.


வியாகாம் 19 ஸ்டூடியோஸ் தயாரிப்பில் மிதாலி ராஜ் வேடத்தில் டாப்சி நடித்த சபாஷ் மித்து திரைப்படத்தை பாலிவுட் இயக்குனர் ஸ்ரீஜித் முகர்ஜி இயக்கினார்.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும் மகளிர் ஐபிஎல் போட்டியில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ள மிதாலி ராஜ்,

”எதைப் பற்றியும் நான் முடிவெடுக்கவில்லை. மகளிர் ஐபிஎல் போட்டி தொடங்க இன்னும் சில மாதங்கள் உள்ளன. முதல் மகளிர் ஐபிஎல் போட்டியில் பங்கேற்க விரும்புகிறேன்.
ஓய்வுக்குப் பிறகு என் வாழ்க்கை மெதுவாக நகரும் என நினைத்தேன். இந்த நாள், அடுத்த வாரம் , அடுத்தத் தொடர் பற்றி திட்டமிட வேண்டியதில்லை அல்லவா ! ஓய்வை அறிவித்த பிறகு கொரோனாவால் பாதிக்கப்பட்டேன். அதில் இருந்து மீண்ட பிறகு பட விளம்பரங்களில் பங்கேற்றேன். கிரிக்கெட் வீராங்கனையாக இருந்தது போல இப்போதும் வாழ்க்கை பரபரப்பாகப் போய்க்கொண்டிருக்கிறது. இதெல்லாம் முடிந்த பிறகு ஓய்வுக்குப் பிறகான வாழ்க்கையை உணர்வேன் என நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்-

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
1
+1
1

Leave a Reply

Your email address will not be published.