ஜூன் 12ம் தேதி புதன்கிழமை NSE வர்த்தகத்தில் கோல் இந்தியா, பவர் கிர்டு கார்பொரேஷன், ஐஷர் மோட்டார், எஸ்பிஐ லைஃப், டெக் மஹிந்திரா பங்கு லாபத்துடனும், மஹிந்திரா அண்டு மஹிந்திரா, பிரிட்டானியா, HUL, TATA Consumer Product, Titan Company பங்குகள் சரிவுடனும் முடித்தன.
இந்திய பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் குறியுடுகள் சென்செக்ஸ் 149.98 புள்ளிகள அதிகரித்து 76,606.57 புள்ளியிலும் நிஃப்டி 58.10 புள்ளிகள் உயர்ந்து 23,322.95 புள்ளியிலும் நிஃப்டி புதிய உச்சத்துடன் முடிவடைந்தது.
சுஸ்லான் எனர்ஜி லிமிடெட் பங்கு புதன்கிழமை வர்த்தகத்தில் 4% உயர்ந்து ஒரு நாளின் அதிகபட்சமான 50.47 ஐ எட்டியது.
அமெரிக்க பெடரல் ரிசர்வ் Future வட்டி விகிதங்களை குறைப்பு காரணமாக புதனன்று ஆரம்ப வர்த்தகத்தில் எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்து ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 0.17% சரிந்து $82.46 ஆக உள்ளது.
அமெரிக்க பெடரல் ரிசர்வ் கொள்கை முடிவு மற்றும் பணவீக்க தரவுகளுக்குப் பிறகு அமெரிக்க பங்குகள் உயர்வுடன் முடிவடைந்தன. அதன் தாக்கம் ஆசிய சந்தைகளில் எதிரொலித்து ஜப்பானின் நிக்கி, தென் கொரியாவின் கோஸ்பி,ஹாங்காங் ஹாங் செங் உள்ளிட்ட சந்தைகள் உயர்வுடன் வர்த்தகம் தொடங்கியது.
வியாழக்கிழமை வர்த்தகத்தில் இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் உயர்வுடன் திறக்கப்பட்டன. சென்செக்ஸ் 397.92 புள்ளிகள் உயர்ந்து 77,004.49 ஆகவும்.நிஃப்டி 115.65 புள்ளிகள் உயர்ந்து 23,438.60 புள்ளியிலும் தொடங்கியது.
இன்றைய வர்த்தகத்தில், பல்வேறு செய்தி முன்னேற்றங்கள் காரணமாக எல்&டி ஃபைனான்ஸ், அரவிந்த், நெஸ்லே இந்தியா, சோபா, வேர்ல்பூல் இந்தியா, பேடிஎம் ,Dr Reddy’s, Torrent Pharma, Gensol, L&T Finance, Glenmark உள்ளிட்ட பங்குகள் கவனம் செலுத்தும் என்று பங்குச் சந்தை தரகர்கள் பரிந்துரை செய்கின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மணியன் கலியமூர்த்தி
காஷ்மீரில் 4 நாட்களில் 4 தீவிரவாத தாக்குதல்… மோடி மவுனம் சாதிப்பது ஏன்? ராகுல் கேள்வி!