இந்திய பங்குச் சந்தையில் இன்று (ஏப்ரல் 7) ஒரே நாளில் 19 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று காலை 9:16 மணி நிலவரப்படி மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 3072 புள்ளிகள் சரிந்து 72,230 புள்ளியாக உள்ளது
இது கடந்து வெள்ளிக்கிழமையின் இறுதி சந்தை நிலவரமான ஒட்டுமொத்த சென்செக்ஸ் மதிப்பில் 4.09% குறைவாகும்.
அதுவே தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 1146 புள்ளிகள் சரிந்து 21758 புள்ளியாக உள்ளது.
இது கடந்து வெள்ளிக்கிழமையின் இறுதி சந்தை நிலவரமான ஒட்டுமொத்த நிஃப்டி மதிப்பில் 5% குறைவாகும்.
மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட அனைத்து நிறுவனங்களின் சந்தை மூலதனம் 19.4 லட்சம் கோடி குறைந்து 385 லட்சம் கோடியாக தற்பொழுது உள்ளது.
அனைத்து முக்கிய துறைகளும் சரிவில் இருந்தன, குறிப்பாக நிஃப்டி மெட்டல்(Metal) 8% மற்றும் நிஃப்டி ஐடி(IT) 7% க்கும் அதிகமாக சரிந்தன.
நிஃப்டி ஆட்டோ(Auto), ரியல்ட்டி(Realty) மற்றும் ஆயில் மற்றும் கேஸ் ஆகியவை தலா 5% க்கும் அதிகமாக சரிந்தன. Indian Stock Market crash
பரந்த சந்தையில், ஸ்மால்-கேப்(Small-Cap) மற்றும் மிட்-கேப்(Mid-Cap) குறியீடுகள் முறையே 10% மற்றும் 7.3% சரிந்தன. Indian Stock Market crash
இந்தியாவின் முக்கியமான குழுமங்களில் ஒன்றான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு சரிந்தன. கடந்த 6 நாள் சரிவில் மட்டும் சந்தை மூலதனம் ரூ.2.26 லட்சம் கோடி சரிந்தது.
அதிகரித்து வரும் வர்த்தக பதட்டங்கள் மற்றும் அமெரிக்காவில் அதிகரித்து வரும் மந்தநிலை அச்சங்களால் தூண்டப்பட்ட உலகளாவிய விற்பனையைத் தொடர்ந்து, இந்திய முக்கிய குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி திங்களன்று கடுமையாக சரிவைத் தொடங்கின.
இதற்கு முக்கிய காரணங்களாக பார்க்கப்படுவது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி அன்று உலகில் உள்ள பெரும்பாலான நாடுகளுக்கு பரஸ்பர வரிவிதிப்பை அறிவித்தார்.
”அமெரிக்காவிற்கு எந்தெந்த நாடுகள் எல்லாம் வரிவிதிக்கிறதோ அதற்கு இணையான வரியை இனி நாமும் விதிப்போம்” என்று அறிவித்திருந்தார். Indian Stock Market crash
இந்த அறிவிப்பின் மூலம் உலக அளவில் மிகப்பெரிய பதற்றத்தை ஏற்படுத்தியது. உலக அளவிலான பொருளாதார அறிஞர்களும் அமெரிக்காவில் உள்ள பொருளாதார அறிஞர்களும் ட்ரம்பின் இந்த அறிவிப்பை கடுமையாக விமர்சித்தனர்.
ட்ரம்பின் அறிவிப்பில் முதலில் பாதிக்கப்பட்டது அமெரிக்காவின் மிகப்பெரிய நிறுவனங்களான ஆப்பிள் மற்றும் நிவிடியா ஆகிய நிறுவனங்கள் கிட்டத்தட்ட இந்திய மதிப்பில் 40 லட்சம் கோடி ரூபாய் என பெரும் இழப்பை சந்தித்துள்ளன.
இது மட்டுமல்லாமல் டிரம்பினுடைய மிக நெருங்கிய கூட்டாளியான எலான் மஸ்க்கிற்கும் கிட்டத்தட்ட இந்திய மதிப்பில் 77 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
அமேசான் நிறுவனத்தின் சிஇஓ ஜெஃப் பிரிசோர்ஸுக்கு ஒரு லட்சத்து 45 ஆயிரம் கோடி ரூபாயும், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாயும்.
இவர்களைத் தாண்டி தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுமான சுந்தர் பிச்சைக்கு இந்திய மதிப்பில் 154 கோடி ரூபாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது.
வால் ஸ்ட்ரீட் வரலாற்றில் 2022 முதல் இது மிகப்பெரிய சரிவாக பதிவாகியுள்ளது.
– விஷால்