2024-25 ஆம் ஆண்டில் நாட்டின் நிகர அந்நிய நேரடி முதலீடு (FDI) 96% குறைந்துள்ளது இந்திய பங்குச் சந்தை ஆபத்தை நோக்கி செல்லும் அறிகுறி என பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். indian share market goes down by investor outrage
நிகர அந்நிய நேரடி முதலீடு என்பது வெளிநாடுகளிலிருந்து இந்தியா பெறும் மொத்த முதலீடு ஆகும்.
நிகர அந்நிய நேரடி முதலீடு 2024-25-ல் வெறும் மூன்றாயிரம் கோடி ரூபாயாக ($353 மில்லியன் டாலர்) உள்ளது. இது கடந்த ஆண்டின் 86 ஆயிரம் கோடி ரூபாயை ($10.1 பில்லியன் டாலர்) இருந்ததைவிட 96% குறைவாகும்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்தியாவில் முதலீடு செய்த வெளிநாட்டு நிறுவனங்கள் அதிக அளவிற்கு லாபம் அடைந்தன. இருப்பினும் இந்தியாவில் பங்கு சந்தை மீதான வரிகள் மற்றும் பிற கட்டணங்கள் அதிகரிப்பதாலும் அமெரிக்காவில் நல்ல லாபம் கிடைப்பதாலும் தங்களுடைய பணத்தை அதிகளவிற்கு வெளியேற்றி உள்ளனர்.
அதேபோல் இந்திய நிறுவனங்களும் வெளிநாடுகளில் அதிகமாக முதலீடு செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
2020 முதல் 2025 வரையிலான நிகர அந்நிய நேரடி முதலீட்டின் வளர்ச்சி/சரிவு
2020-21 | 3.70 லட்சம் கோடி ரூபாய் |
2021-22 | 3.28 லட்சம் கோடி ரூபாய் |
2022-23 | 2.38 லட்சம் கோடி ரூபாய் |
2023-24 | 86 ஆயிரம் கோடி ரூபாய் |
2024-25 | 3 ஆயிரம் கோடி ரூபாய் |
வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் பணத்தை இந்திய சந்தையில் இருந்து வெளியே எடுப்பது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
இது 2024-25ல் 4.38 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்யும் முக்கிய துறைகளாக இருப்பது உற்பத்தி, நிதி சேவைகள், மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு துறைகள்.இது மொத்த முதலீட்டில் 60% பங்கு ஆகும்.
அதேபோல் இந்தியாவில் முதலீடு செய்யும் முக்கிய நாடுகளாக சிங்கப்பூர், மொரீஷியஸ், ஐக்கிய அரபு அமீரகம் (UAE), நெதர்லாந்து, USA ஆகியவை உள்ளன.
இந்த நாடுகள் மொத்த முதலீட்டின் 75% மேல் பங்குடன் இருக்கின்றன.