“வகுப்பறையா? இல்ல டான்ஸ் ஃப்ளோரா?” – அமெரிக்காவில் ‘பத்மீஸ் தில்’ பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட இந்தியப் பேராசிரியர்! வைரல் வீடியோ!

Published On:

| By Santhosh Raj Saravanan

indian professor kartik hosanagar dance badtameez dil wharton school viral video

வகுப்பறை என்றாலே பாடம், பரீட்சை, கண்டிப்பான வாத்தியார் என்றுதான் நமக்கு ஞாபகம் வரும். ஆனால், அமெரிக்காவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகம் ஒன்றில், இந்தியப் பேராசிரியர் ஒருவர் வகுப்பறையைத் திருமண மண்டபம் போல மாற்றிய ருசிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

வார்டன் பிசினஸ் ஸ்கூலில் ஆட்டம்: அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் உள்ள ‘வார்டன் ஸ்கூல்’ (The Wharton School) உலகப் புகழ்பெற்றது. இங்கு எம்பிஏ (MBA) மாணவர்களுக்குப் பாடம் எடுப்பவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பேராசிரியர் கார்த்திக் ஹோசானகர் (Kartik Hosanagar).

ADVERTISEMENT

வழக்கமாக “கேஸ் ஸ்டடி”, “பிசினஸ் ஸ்ட்ராட்டஜி” என்று சீரியஸாகப் போகும் இவரது வகுப்பு, செமஸ்டர் முடியும் கடைசி நாளில் மட்டும் கொண்டாட்டக் களமாக மாறிவிடும்.

பத்மீஸ் தில்… மானே…: சமீபத்தில் செமஸ்டர் கடைசி நாளில், பேராசிரியர் கார்த்திக் ஒரு சர்ப்ரைஸ் கொடுத்தார். சாதாரண ஜீன்ஸ் மற்றும் ஸ்வெட்டர் அணிந்திருந்த அவர், திடீரென ரன்பீர் கபூரின் சூப்பர் ஹிட் பாடலான “பத்மீஸ் தில்” (Badtameez Dil) பாடலுக்கு நடனமாடத் தொடங்கினார்.

ADVERTISEMENT

https://www.instagram.com/reel/DSD_mMjDWQV

இதைக் சற்றும் எதிர்பாராத மாணவர்கள், உற்சாகத்தில் விசிலடித்து, கைதட்டி ஆரவாரம் செய்தனர். பேராசிரியர் வெட்கப்படாமல் வகுப்பறையின் நடுவே நடனமாடிய வீடியோ இப்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

ADVERTISEMENT

வைரல் ரியாக்ஷன்: வார்டன் ஸ்கூலின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கமே இந்த வீடியோவைப் பகிர்ந்து, “செமஸ்டர் முடிவைக் கொண்டாட இதைவிடச் சிறந்த வழி இருக்க முடியுமா?” என்று பாராட்டியுள்ளது.

வீடியோ வைரலானதைப் பார்த்த பேராசிரியர் கார்த்திக், “என் டான்ஸுக்கு இவ்வளவு வரவேற்பா? பேசாமல் நான் பாடம் நடத்துவதை விட்டுவிட்டு, இன்ஸ்டாகிராமில் முழுநேர டான்ஸராக மாறிவிடலாம் என்று யோசிக்கிறேன்” என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார்.

கூல் குரு: “வாத்தியார்னா இப்படி இருக்கணும்யா…” என்று நெட்டிசன்கள் இவரைப் புகழ்ந்து தள்ளுகின்றனர். படிப்பு தாண்டி, மாணவர்களுடன் நட்பாகப் பழகும் இவரைப் போன்ற பேராசிரியர்களால்தான் கல்லூரி நாட்கள் மறக்க முடியாததாக மாறுகின்றன!


Video Link:

இதையும் படிங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share