தமிழகத்தை சேர்ந்த அனிதா ஆனந்த் கனடா பிரதமர் ஆவாரா?

Published On:

| By Kumaresan M

கனடா பிரதமர் பதவியை ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து நான்கு பேர் பிரதமர் பதவிக்கான ரேசில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச அரங்கில் மட்டும் அல்லாமல், உள்நாட்டிலும் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலக வேண்டும் என அவர் சார்ந்த லிபரல் கட்சி எம்.பி.,க்களே அவருக்கு எதிராக கருத்து தெரிவித்தனர். இதையடுத்து, ஜனவரி 6 ஆம் தேதி பிரதமர் பதவியில் இருந்தும் லிபரல் கட்சித் தலைவர் பதவியில் இருந்தும் அவர் விலகினார். புதிய பிரதமர் பதவி ஏற்கும் வரையில் அவர் பதவியில் தொடருவார்.

தொடர்ந்து, கனடாவின் புதிய பிரதமர் ஆக யார் பதவியேற்பார் என்ற கேள்வி எழுந்தது. இதில், அந்நாட்டு அமைச்சர் அனிதா ஆனந்த் உள்ளிட்டோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன.

அனிதா ஆனந்தின் தந்தை ஆனந்த் மயக்க மருந்து நிபுணர். இவர் தமிழத்தை சேர்ந்தவர். தாயார் சரோஜா பஞ்சாப்பை சேர்ந்தவர். இவரும் மருத்துவர்தான். தற்போது, 57 வயதான அனிதா 2019 ஆம் ஆண்டு ஆக்வில்லா தொகுதியில் வெற்றி பெற்றதும், ட்ரூடோ அமைச்சரவையில் இடம்பெற்றார். தற்போது போக்குவரத்து மற்றும் உள்நாட்டு வர்த்தகத்துறை அமைச்சராக உள்ளார்.

அனிதா தவிர மெலானி ஜோலி, கிறிஸிடியா ஃப்ரீலேண்ட், மார்க் கார்னே ஆகியோரும் கனடா பிரதமர் பதவிக்கு போட்டியில் உள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

-எம்.குமரேசன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share