போர் நிறுத்த அறிவிப்பை மீறி பாகிஸ்தான் தாக்குதல்களை தொடரும் நிலையில் அந்நாட்டின் மிக முக்கியமான கராச்சி துறைமுகத்தை இலக்கு வைத்து இந்திய கடற்படை இப்போதும் தயார் நிலையில்தான் இருக்கிறது என கடற்படை வைஸ் அட்மிரல் ஏஎன் பிரமோத் எச்சரித்துள்ளார்.
டெல்லியில் ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி, கடற்படை வைஸ் அட்மிரல் ஏ.என்.பிரமோத், எஸ்.எஸ்.ஷார்தா ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
- பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு வர காரணம், இந்திய ராணுவம் மற்றும் விமானப் படையுடன் கடற்படையும் இணைந்து தயார் நிலையில் இருந்ததால்தான்.
- பாகிஸ்தானுக்கு எதிராக அரபிக் கடல் பகுதியில் தயார் நிலையில் இந்திய கடற்படை நிறுத்தப்பட்டிருந்தது.
- பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தை தாக்குவதற்கு இந்திய கடற்படை முழுவீச்சில் தயார் நிலையில் இருந்தது. இப்போதும் கராச்சி துறைமுகத்தை தாக்க இந்திய கடற்படை தயாராகவே இருக்கிறது.
- பாகிஸ்தான் இடைவிடாமல் அனுப்பிய டிரோன்களை எதிர்கொள்ள இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்புகள் தயார் நிலையில் இருந்ததால் அவை சுட்டு வீழ்த்தப்பட்டுவிட்டன.
- நமது தரப்பு இழப்புகள் குறித்து இப்போதைய போர்ச்சூழலில் விவரிக்க இயலாது. ஆனால் நமது தாக்குதல் நிறைவேறி இருக்கிறது.
- பாகிஸ்தான் போர் நிறுத்த அறிவிப்பை மீறித் தாக்குதல் நடத்தினால் பதிலடி மிகக் கடுமையானதாகவே இருக்கும்
- இந்தியாவின் Operation Sindoor நடவடிக்கையில் 9 தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டு 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.