”ஆபத்தில் இந்திய திரைத்துறை” : வெற்றிமாறன்

Published On:

| By christopher

நடிகை நயன்தாராவின் 75 ஆவது படமான “அன்னபூரணி” டிசம்பர் மாதம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை ஜீ ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்திருந்தது. அறிமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இந்த படத்தை இயக்கியிருந்தார்.

இதனை தொடர்ந்து அன்னபூரணி படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான பிறகு மீண்டும் இந்த படம்  ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அதன்பிறகு இந்த படத்தில் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் நிறைய வசனங்களும், காட்சிகளும் இடம்பெற்றுள்ளதாக இந்து அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தினர். பலரும் இப்படத்தை தடை செய்யவேண்டும் என்று சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட தொடங்கினர். இதனை அடுத்து, அன்னபூரணி படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டது.

எனினும் படம் தடை செய்யப்பட்டது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என்று பலரும் கருத்து வருகின்றனர். இந்த நிலையில் அன்னபூரணி பட விவகாரம் குறித்து தற்போது இயக்குனர் வெற்றிமாறன் கூறிய கருத்து சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளது.

வெற்றிமாறன் கூறியதாவது, “சென்சார் செய்யப்படாத படைப்பு சுதந்திரம் என்று எதுவும் இந்தியாவில் இருக்கும் திரைப்பட இயக்குநர்களுக்கு கிடையாது. இது OTT க்கும் பொருந்தும். ஆனால் தணிக்கை குழு அனுமதி வழங்கிய ஒரு படத்தை, புற அழுத்தங்களால் OTT-இல் இருந்து நீக்க வைப்பது திரைத் துறைக்கு நல்லது கிடையாது. ஒரு படத்தை திரையிட அனுமதிப்பதற்கும் மறுப்பதற்கும் தணிகை குழுவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. இத்தகைய நிகழ்வுகள் தணிக்கை குழுவின் அதிகாரத்தை கேள்விக்குறியாக்கும்” என்று வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கார்த்திக் ராஜா

பொங்கலும், வேஷ்டியும்: அப்டேட் குமாரு

தங்கலான் படத்தின் புது ரிலீஸ் அப்டேட் இதோ!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share