அமெரிக்காவில் இந்திய குடும்பம் கொலை: சிக்கிய வீடியோ ஆதாரம்!

Published On:

| By christopher

அமெரிக்காவில் குடும்பத்துடன் கடத்தப்பட்ட இந்திய வம்சாவழியினர் 4 பேரின் உடல்களும் பழத்தோட்டம் ஒன்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கலிஃபோர்னியா காவல்துறை இன்று (அக்டோபர் 6) அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சென்ட்ரல் வெலி பகுதியில் இந்திய வம்சாவளியான ஜஸ்தீப் சிங் (36) குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

ADVERTISEMENT

இவரை கடந்த 3 ம் தேதி மெர்சிட் கவுண்டி பகுதியில் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் இருந்தபோது, துப்பாக்கி முனையில் மர்ம நபர்கள் சிலர் கடத்தி உள்ளனர்.

ஜஸ்தீப் சிங்குடன் அவரது மனைவி ஜஸ்லீன் கவூர் (27), அவரது மகன் அரோகி டொஹிரி என்ற 8 மாத பெண் குழந்தை மற்றும் உறவினர் அமந்தீப் சிங் (வயது 39) ஆகியோர் கடத்தப்பட்டனர்.

ADVERTISEMENT
indian family killed in america

நெடுஞ்சாலையில், ஜஸ்தீப் சிங்கின் அலுவலகத்தின் அருகே நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து தகவலறிந்த கலிஃபோர்னியா போலீசார், வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். மேலும் கடத்தி செல்லப்பட்ட இந்திய குடும்பத்தினரை மீட்கும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கினர்.

ADVERTISEMENT

சந்தேகப்படும் குற்றவாளிகளை அடையாளம் கண்டால், பொது மக்கள் தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கும்படியும் போலீசார் அறிவுறுத்தினர்.

தோட்டத்தில் சடலம்!

இந்நிலையில் கைக்குழந்தை உட்பட கடத்தப்பட்ட நால்வரின் உடல்களும் இந்தியானா மற்றும் ஹட்சின்சன் சாலைகளுக்கு அருகிலுள்ள பழத்தோட்டத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கலிஃபோர்னியா காவல்துறை தெரிவித்துள்ளது.

வீடியோ ஆதாரம் சிக்கியது!

மேலும் கடத்தல் காரர்கள் துப்பாக்கி முனையில் இந்திய வம்சாவளியினரை முகமூடி அணிந்த நபர் துப்பாக்கி முனையில் கடத்தும் வீடியோ வெளியாகி உள்ளது.

அதில், கடத்தல்காரன் ஜஸ்லீன் கவுரையும் அவரது 8 மாத குழந்தையையும் கட்டிடத்திலிருந்து ஒரு டிரக்கிற்கு வெளியே அழைத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளது.

குற்றவாளி தற்கொலை முயற்சி!

இதற்கிடையே ஜஸ்தீப் சிங்கின் உறவினர் கொடுத்த தகவலின் பேரில் ஜீசஸ் சல்காடோ என்ற நபரை கைது செய்ய போலீசார் சென்றுள்ளனர்.

அப்போது துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்ற சல்கோடாவை மடக்கி பிடித்த போலீசார் மருத்துவமனை சிறையில் அடைத்துள்ளனர்.

அங்கு சிகிச்சைப் பெற்று வரும் சல்கோடோவிடம் இன்னும் விசாரணை நடத்தப்படவில்லை. விசாரணைக்கு பிறகே கொலைக்கான உண்மைக் காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

கிறிஸ்டோபர் ஜெமா

கொடூர விபத்து: ஊட்டிக்கு சுற்றுலா வந்த மாணவர்கள் உயிரிழப்பு!

இந்தியாவின் 4 இருமல் மருந்துகளுக்கு தடை ஏன்? உலக சுகாதார நிறுவனம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share