“டயட் எனக் கூறிக்கொண்டு, பலர் உடல் எடையைக் குறைப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர். அவர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளைக் கண்டுகொள்வதில்லை. இதனால், உடல் எடை மட்டும்தான் குறையுமே தவிர, உடலுக்குத் தேவையான சத்து கிடைக்காது. அன்றாட வேலைகளையே செய்ய முடியாமல் தடுமாறுவார்கள்.
உடலுக்குத் தேவையான முக்கிய ஊட்டச்சத்துள்ள உணவுகளில்தான் உள்ளன. அவற்றில் என்ன வகையான உணவுகள் எடுத்துக்கொள்கிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
உடல் எடையைக் குறைப்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல், உட்கொள்ளும் உணவிலும் கவனம் செலுத்த வேண்டும்” என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
எடுத்துக்காட்டாக, முட்டையில் வைட்டமின் சி தவிர, பிற அனைத்து ஊட்டச்சத்துகளும் காணப்படுகின்றன. முட்டை சாப்பிடாதவர்களுக்கு சோயா பீன்ஸ், பனீர், டோஃபு, சோயா பால் ஆகியவற்றில் முட்டைக்குச் சமமான ஊட்டச்சத்துகள் கிடைக்கும்.
முட்டைக்குப் பதிலாக மாற்று உணவாக சோயாவை எடுத்துக்கொள்ளலாம். முளைகட்டிய பயறு வகைகள், பருப்பு வகை உணவுகள் எடுத்துக்கொள்வதால் உடலுக்குத் தேவையான புரதச்சத்துகள் கிடைத்துவிடும்.
ஒருநாளில் நாம் சராசரியாக எடுத்துக்கொள்ள வேண்டிய ஊட்டச்சத்துகளின் அளவை, உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் இந்திய மருத்துவ ஆய்வு மன்றம் (ICMR) வெளியிட்டுள்ளன.
ஒரு சராசரி மனிதன் ஒரு நாளில் 1,800 கலோரிகள் எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் 60% தானியங்கள், பருப்பு வகைகள், அரிசி மற்றும் கோதுமையிலிருந்தும், 20% புரதச் சத்திலிருந்தும், மீதமுள்ள 20% நல்ல கொழுப்புச்சத்தில் இருந்தும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வரையறுத்துள்ளனர்.
ஒருவர் பொதுவாக ஒருநாளில் 400 முதல் 500 கிராம் அளவுக்கு காய் மற்றும் பழங்கள் உட்கொள்ள வேண்டும்.
அதேபோல், உணவு உட்கொள்ளும் நேரம் மற்றும் காலை உணவு என்பது மிகவும் முக்கியம்.
பலர் காலை உணவு எடுத்துக்கொள்ள மறந்து / மறுத்துவிடுகின்றனர். ஆனால், நள்ளிரவில் ‘3 மணி பிரியாணி’ சாப்பிட்டு வீடியோ போடுகின்றனர்.
எந்த நேரம், எதைச் சாப்பிட வேண்டும் என்ற வரையறை உள்ளது. ஓர் உணவு எடுத்துக் கொள்வதற்கும் அடுத்த வேளை உணவு எடுத்துக்கொள்வதற்கும் இடையே சரியான கால இடைவெளி என்பது மிகவும் முக்கியமான ஒன்று” என்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ்: அணியும் நகைகளை சுத்தம் செய்வதும் அவசியம்!
டாப் 10 நியூஸ் : ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் முதல் வேட்டையன் ஃபர்ஸ்ட் சிங்கிள் வரை!
கிச்சன் கீர்த்தனா : மட்டன் கொத்துக்கறி
டிஜிட்டல் திண்ணை: அமெரிக்காவில் இருந்து ஆலோசனை… ஸ்டாலின் கையில் ஹிட் லிஸ்ட்!