சென்னை:
“சீருடைப் பணியில் மீண்டும் ஒரு ரவுண்டு வர ஆசையா?” ஓய்வு பெற்ற பின்னரும் நாட்டுக்குச் சேவை செய்யத் துடிக்கும் முன்னாள் கடற்படை மற்றும் கடலோரக் காவல் படை வீரர்களுக்குத் தமிழ்நாடு காவல் துறையின் கடலோரப் பாதுகாப்புக் குழுமம் (Coastal Security Group) ஒரு அருமையான வாய்ப்பை வழங்கியுள்ளது.
தமிழகக் கடலோரப் பகுதிகளில் ரோந்துப் பணிகளை மேற்கொள்ளவும், அதிவிரைவுப் படகுகளை இயக்கவும் ஆட்கள் தேவைப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காலியிடங்கள் விவரம்:
மொத்தம் 51 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் வருடாந்திர ஒப்பந்த அடிப்படையில் (Contract Basis) நிரப்பப்பட உள்ளன.
படகுக் தொழில்நுட்பக் காவல் உதவி ஆய்வாளர் (Technical SI):
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.36,900.
படகுக் தொழில்நுட்பத் தலைமைக் காவலர் (Technical Head Constable):
காலியிடங்கள்: 41
சம்பளம்: மாதம் ரூ.20,600.
எந்த ஊரில் வேலை?
தமிழகத்தின் முக்கியக் கடலோர மாவட்டங்களான நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய இடங்களில் இந்தப் பணியிடங்கள் காலியாக உள்ளன. சொந்த ஊருக்கு அருகிலேயே மீண்டும் பணியில் சேர இது ஒரு நல்ல வாய்ப்பு.
தகுதி என்ன?
விண்ணப்பதாரர்கள் முன்னாள் இந்தியக் கடலோரக் காவல் படை (Indian Coast Guard) அல்லது முன்னாள் இந்தியக் கடற்படை (Indian Navy) வீரராக இருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.12.2025 தேதியின்படி, 50 வயதுக்கு மிகாதவராக இருக்க வேண்டும்.
தேர்வு முறை:
விண்ணப்பதாரர்களுக்குச் சான்றிதழ் சரிபார்ப்பு, எழுத்துத் தேர்வு மற்றும் வாய்மொழித் தேர்வு (Interview) நடைபெறும். இதில் தகுதி பெறுபவர்களுக்குத் தனியாக அழைப்புக் கடிதம் அனுப்பப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?
விருப்பமுள்ளவர்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும்.
முகவரி:
கூடுதல் காவல்துறை இயக்குநர் (ADGP),
கடலோரப் பாதுகாப்புக் குழுமம்,
காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலக வளாகம் (DGP Office Campus),
டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, மயிலாப்பூர்,
சென்னை – 600 004.
கடைசி தேதி:
விண்ணப்பங்கள் போய்ச் சேர வேண்டிய கடைசி நாள்: 17.12.2025. ஓய்வு பெற்ற பிறகும் சுறுசுறுப்பாக இயங்க நினைக்கும் முன்னாள் படைவீரர்கள் இந்த வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்! அதிவிரைவுப் படகுகளை இயக்குதல் மற்றும் பராமரித்தல் ஆகியவை முக்கியப் பணி என்பதால், அந்தத் துறையில் முன் அனுபவம் அவசியம்.
