சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் 7வது பெரிய பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கியில் உள்ள சுமார் 1500 பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. indian bank recruitment 2025
பணி குறித்த முழு விபரங்கள்
பணியிடங்கள் : தமிழ்நாட்டில் 227, புதுவையில் 9, தெலங்கானாவில் 42, கேரளாவில் 44, ஆந்திர பிரதேசத்தில் 82, கர்நாடகாவில் 42, என மொத்தம் 30 மாநிலங்களில் 1500 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் 1.4.2021 க்கு முன் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் மாநிலங்களின் உள்ளூர் மொழிகளை அறிந்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு : 20 முதல் 28 (SC/ST – 33, OBC – 31, மாற்று திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்வு)
ஊதியம் : மெட்ரோ / நகர்ப்புறத்தில் ரூ.15000, ஊரகம்/ சிறுநகர பகுதிகளில் ரூ.12000
தேர்வு நடைபெறும் இடங்கள் : தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, வேலூர், விருதுநகர், தஞ்சை
கட்டண விபரம் : ரூ. 800 (SC/ST- ரூ.175)
விண்ணப்ப தேதி : 18.7.2025 முதல் 7.8.2025 வரை
விண்ணப்பிக்கும் முறை https://www.indianbank.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விபரங்களை https://www.indianbank.in/career/ என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். indian bank recruitment 2025
