ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் மீது இந்தியா ராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. உலக அரங்கில் இந்தியாவுக்கான ஆதரவு அதிகரித்து வருகிறது.
இதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் பாகிஸ்தான், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அந்தப் பக்கத்தில் இருந்து தொடர்ந்து இந்தியா மீது தன்னிச்சையான துப்பாக்கிச் சூடுகளை நடத்தி போர் நிறுத்த விதிகளை மீறி வருகிறது. இதற்கு இந்திய ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருவதாக ராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன. Indian Army responds to unprovoked firing by Pakistan
அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், மே 5 ஆம் தேதி இரவு முதல் மே 6 ஆம் தேதி அதிகாலை வரை காஷ்மீரில் இருக்கும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அப்பால் உள்ள பாகிஸ்தானிய நிலைகளில் இருந்து, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்திருக்கிறது.
மே 05 அன்று இரவு, ஜம்மு காஷ்மீரில் உள்ள குப்வாரா, பாரமுல்லா, பூஞ்ச், ரஜோரி, மெந்தர், நௌஷேரா, சுந்தர்பானி மற்றும் அக்னூர் ஆகிய பகுதிகளில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அப்பால் உள்ள நிலைகளில் இருந்து பாகிஸ்தான் ராணுவம் தூண்டப்படாத சிறிய ஆயுதத் தாக்குதல்களை மேற்கொண்டது. இதற்கு இந்திய ராணுவம் விகிதாசார முறையில் பதிலளித்தது.
முன்னதாக மே 4 மற்றும் 5 ஆம் தேதி இரவு, ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் குப்வாரா, பாரமுல்லா, பூஞ்ச், ராஜௌரி, மெந்தர், நௌஷேரா, சுந்தர்பானி மற்றும் அக்னூர் பகுதிகளுக்கு எதிரே உள்ள பகுதிகளில் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு (எல்ஓசி) அந்தப்பக்கம் இருந்து பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது.
ஏப்ரல் 25 முதல் 26 வரை இரவு பாகிஸ்தான் ராணுவத்தின் தன்னிச்சையான சிறிய ரக துப்பாக்கிச் சூடு தொடங்கியதிலிருந்து, இந்தியா தொடர்ந்து 12 ஆவது நாளாக இதுபோன்ற பதிலடிகளைக் கொடுத்து வருகிறது. Indian Army responds to unprovoked firing by Pakistan
பாகிஸ்தானின் இந்த போர் நிறுத்த மீறல்கள் குறித்து விவாதிக்க ஏப்ரல் 29 அன்று, இந்தியா மற்றும் பாகிஸ்தானின் இராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் ஹாட்லைன் மூலம் பேசினர். ஆனபோதும் தொடர்ந்து எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் அந்தப் பக்கம் இருந்து பாகிஸ்தான் ராணுவத்தின் போர் நிறுத்த மீறல்கள் தொடர்ந்து வருகின்றன. இந்தத் தகவல்களை ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
