நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 19-ஆம் தேதி பாகிஸ்தானில் தொடங்கியது. இந்தியாவைத் தவிர்த்து மற்ற ஏழு நாடுகளின் போட்டிகள் பாகிஸ்தானிலும் இந்தியாவின் போட்டிகள் மட்டும் துபாயிலும் நடைபெற்று வருகிறது.
.. Indian anthem இதனிடையே நான்காவது லீக் ஆட்டத்தில் இன்று ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் லாகூரிலுள்ள கடாபி மைதானத்தில் பலப்பரீட்சை தொடங்கியது. போட்டி நடைபெறுவதற்கு முன்பாக இரண்டு நாட்டு தேசிய கீதங்களும் இசைக்கப்படுவது வழக்கம்.

ஆனால், ஆஸ்திரேலியா நாட்டின் தேசிய கீதத்தை இசைப்பதற்கு பதிலாக இந்தியாவின் தேசிய கீதம் தவறுதலாக இசைக்கப்பட்டது. இதனால் மைதானத்தில் இருந்த ஆஸ்திரேலிய வீரர்களும் ரசிகர்களும் சற்று அதிர்ச்சியடைந்தனர். பின்னர், ஏற்பாட்டாளர்கள் தங்கள் தவறை உணர்ந்து இந்திய தேசிய கீதத்தை ஆஃப் செய்து ஆஸ்திரேலியா நாட்டின் தேசிய கீதத்தை இசைத்தனர்.

இந்த சம்பவத்தையடுத்து போட்டியை நடத்தும் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டை பலரும் சமூக வலைத்தளத்தில் விமர்சித்து வருகின்றனர். சிலர் கலாய்த்தும் தள்ளுகின்றனர்.
இந்தப் போட்டியில், கிரிக்கெட் உலகின் பலமான இரு அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுக்கும் இதுவே முதல் போட்டியாகும்.

சமீபககாலமாக நடந்த போட்டிகளில், ஆஸ்திரேலியா பலத்த தோல்வியை சந்தித்துள்ளது. குறிப்பாக இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மிட்செல் மார்ஷ், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோய்னிஸ், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் பாட் கம்மின்ஸ் ஆகியோர் இடம்பெறவில்லை. ஸ்டீவ் ஸ்மித் தற்காலிக கேப்டனாகவும், பல புதிய வீரர்கள் இருப்பதாலும், ஆஸ்திரேலிய அணி இந்த தொடர் மிகவும் சவாலானதாகவே அமையும் என்கிறார்கள்.
இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணி தோல்வியடைந்த நிலையில், இந்த தொடரில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் விளையாடி வருகிறார்கள்.