இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஜாகுவார் ரக போர் விமானம், ராஜஸ்தான் மாநிலத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் ஒரு விமானி உயிரிழந்தார். Indian Air Force Jaguar Fighter Jet Crashes
இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஜாகுவார் ரக போர் விமானம், ராஜஸ்தான் மாநிலத்தில் சுரு மாவட்டம், ரத்தன்கர் பகுதியில் இன்று ஜூலை 9-ந் தேதி, பிற்பகல் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த விமானி ஒருவர் உயிரிழந்தார். சம்பவ இடத்துக்கு தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்புக் குழுவினர் விரைந்துள்ளனர்.
