இந்தியன் 2 மட்டுமல்ல இந்தியன் 3 டிரைலரும் ரெடியா..?

Published On:

| By Kavi

Indian 3 trailer out with Indian 2?

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் 2.

இந்த படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படத்தின் நீளம் அதிகமாக இருப்பதால் இரண்டு பாகங்களாக வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அதாவது இந்தியன் 2 படத்தை தொடர்ந்து இந்தியன் 3 படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் 3 படத்திற்கு தேவைப்படும் காட்சிகளும் படமாக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் இந்தியன் 2 திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தேர்தல் முடிவுகள் காரணத்தினால் இந்தியன் 2 திரைப்படம் ஜூலை மாதம் தான் வெளியாகும் என்றும், ஜூன் மாதத்தில் இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் டிரைலர் குறித்த ஒரு சுவாரசியமான தகவல் வெளியாக இருக்கிறது.

அது என்னவென்றால், இந்தியன் 2 படத்தின் டிரைலர் ஜூன் மாதம் இரண்டாம் வாரத்தில் வெளியாகும் என்ற தகவல் சமூக வலைதளங்களில் வைரல் ஆக பரவி வருகிறது.

இதில் மற்றொரு சிறப்பான விஷயம் என்னவென்றால் இந்தியன் 2 படம் டிரைலர் மட்டுமல்ல இந்தியன் 3 படத்திற்கான டிரைலரையும் படக்குழு தயார் செய்து வருவதாக சொல்லப்படுகிறது.

இந்தியன் 2 படத்தின் இறுதியில் அடுத்த பாகத்திற்கு லீட் கொடுக்கும் விதமாக இந்தியன் 3 டிரைலரை படக் குழு இணைக்க திட்டமிட்டிருக்கிறதாம்.

இந்தியன் 2 திரைப்படம் ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போனதால் ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தாலும், ஜூன் 27 ஆம் தேதி பிரபாஸ் நடிப்பில் வெளியாக இருக்கும் கல்கி 2898AD திரைப்படத்தில் கமல் ஹாசன் நடித்திருப்பதால் ஜூன் மாதம் எப்படியும் திரையில் கமல் நடிப்பை பார்த்து விடலாம் என்று ரசிகர்கள் கொஞ்சம் ஆறுதல் அடைந்திருக்கின்றனர்.

கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா : கேரட் மில்க் ஷேக்!

உலக அளவில் அதிக முறை இணையத்தளம் முடக்கப்பட்ட நாடுகள்: இந்தியாவின் சாதனை!

விராட் கோலியின் சாதனையை முறியடித்த பாபர் அசாம்

சாதித்த திருநங்கை மாணவி: கெளரவித்த கனிமொழி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share