இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதிய சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபாயில் இன்று (பிப் .23 ) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது.
மதியம் 2 மணிக்கு டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி தொடர்ச்சியாக 12 வது போட்டியில் டாஸ் தோற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் வீரர்கள் பாபர் அசாம் மற்றும் இமாம் உல் ஹக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.india won agaiinst pakistan
இந்திய வீரர் முகமது ஷமி பந்து வீச்சை தொடங்கினார். முதல் ஓவரில் மட்டும் முகமது ஷமி 5 பந்துகளை வைடாக வீசினார். 6 ரன்கள் விட்டு கொடுக்கப்பட்டது. முன்னதாக , ஜாகீர் கான், இர்பான் பதான் ஆகியோர் ஒரே ஓவரில் 11 பந்துகளை வீசியுள்ளனர். தொடர்ந்து,. பாகிஸ்தான் ஓபனர்கள் பொறுமையாக ஆடினர். அவ்வப்போது, பந்தை பவுண்டரிக்கும் விரட்டினர்.india won agaiinst pakistan

எனினும், ‘9வது ஓவரில் ஹர்திக் பாண்ட்யா பந்தில் பாபர் அசாம் வீழ்ந்தார். 23 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அவர் அவுட்சைட் எட்ஜ் பந்தை அடிக்க முயல, பந்து பேட்டில் பட்டு விக்கெட் கீப்பர் ராகுலிடம் தஞ்சமடைந்தது. பாகிஸ்தான் அணி 47 ரன்களில் முதல் விக்கெட்டை இழந்த நிலையில் , அடுத்ததாக முகமது ரிஸ்வான் களம் இறங்கினார்.
ஆனால், இந்த ஜோடியும் நிலைக்கவில்லை. இதே ஓவரில் ஒரு குயிக் சிங்கிள் ரன்னுக்கு ஆசைப்பட்டு இமாம் ரன் அவுட் ஆனார். அக்ஷார் பட்டேல் நேரடியாக பந்தால் ஸ்டம்பை அடித்து இமாமை வெளியேற்றினார். 10 ஓவர்களில் பாகிஸ்தான் 52 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்திருந்தது.india won agaiinst pakistan
தொடர்ந்து , ரிஸ்வானுடன் சவுத் ஷகீல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக இந்திய பந்துவீச்சை எதிர்கொண்டது. இதனால், ரன்ரேட் வெகுவாக குறைந்தது. ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் அணி 26வது ஓவரில்தான் 100 ரன்களை கடந்தது. இதற்கு பிறகு, ரிஸ்வானும் சவுத் ஷகீலும் இந்திய ஸ்பின்னர்களை சமாளித்து ஓரளவுக்கு அடித்து விளையாடினார்கள். இதனால், சவுத் ஷகில் 63 பந்துகளில் அரை சதம் அடித்தார்.

பாகிஸ்தான் அணி 31 ஓவர்களில் 137 ரன்களை எடுத்திருந்தது. பின்னர், சவ்த் ஷகீல் 63 ரன்களிலும் ரிஷ்வான் 46 ரன்களிலும் அவுட் ஆனார்கள். ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் அணி 43 ஓவர்களில் 200 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது. இந்திய ஸ்பின்னர்கள் அபார பந்து வீச்சில் பாகிஸ்தான் பேட்டிங் சீர்குலைந்தது என்றே சொல்லாம். ஆனாலும், முகமது ஷமி வீசிய 48 வது ஓவரில் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் இரு சிக்ஸர்கள் விளாசினர். இதனால், பாகிஸ்தான் 250 ரன்களை கடந்துவிடும் என்கிற நிலை உருவானது.india won agaiinst pakistan
ஆனால், கடைசி ஓவரில் பாகிஸ்தான் டெயில் என்டர்சை ரன் எடுக்க விடாமல் ராணா சுருட்டினார். இதனால், பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்களில் 241 ரன்களுக்கு சுருண்டது. இந்தியா தரப்பில் ஹர்திக் பாண்ட்யா இரு விக்கெட்டுகளையும் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும் அக்ஸார் பட்டேல் 2 விக்கெட்டுகள் (அதோடு ஒரு அட்டகாசமான ரன் அவுட்டும் உண்டு )ரவீந்தர ஜடேஜா, ராணா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.india won agaiinst pakistan
தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேன்களாக ரோகித் சர்மா சுப்மன் கில் களம் இறங்கினார். ஷாகீன் வீசிய முதல் ஓவரில் 2 ரன்களுக்கு மேல் அடிக்க முடியவில்லை. அடுத்த ஓவரில் ரோகித் ஒரு பவுண்டரி மற்றும் சிக்ஸர் அடித்து கலக்கினார். எனினும், ரோகித் சர்மா 20 ரன்கள் எடுத்த நிலையில் ஷாகீன் யாக்கரில் விக்கெட்டை பறி கொடுத்தார்.
தொடர்ந்து, கோலி கில்லுடன் ஜோடி சேர்ந்தால். அதிரடியாக ஆடிய சுப்மன் கில் 46 ரன்களில் ஆட்டம் இழந்தார். அப்போது, இந்திய அணி 18 ஓவர்களில் 117 ரன் எடுத்திருந்தது. அடுத்ததாக, ஷ்ரேயாஸ் ஐயர் கோலியுடன் ஜோடி சேர்ந்தார். விராட் கோலி 62 பந்துகளில் சதம் அடித்தார். இது ஒருநாள் போட்டியில் கோலி அடிக்கும் 74வது அரை சதம் ஆகும். ஸ்ரேயாஸ் ஐயரும் அரை சதம் கண்டார்.

ஆனால், 56 ரன்கள் எடுத்திருந்த போது ஸ்ரேயாஸ் குல்திஷ் ஷா பந்தில் வீழ்ந்தார். தொடர்ந்து, ஹர்திக் பாண்ட்யா களம் இறங்கினார். ஹர்திக் பாண்டியாவும் 8 ரன்களில் அவுட்டாகி விட , அக்சர் படேல் களத்துக்கு வந்தார். ஒரு கட்டத்தில் இந்த ஆட்டத்தில் கோலி சதம் அடிப்பாரா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால், 96 ரன்களில் இருந்த விராட் கோலி கடைசியாக ஒரு பவுண்டரி அடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்ததோடு சதமும் அடித்தார். இந்த சதம் 111 பந்துகளில் கிடைத்தது. இந்திய அணி 42.3 ஓவரில் 244 ரன்கள் அடித்து எளிதாக வெற்றி பெற்றது.
சாம்பியன்ஸ் டிராபியை பொறுத்த வரை, ஒரு ஆட்டத்தில் தோல்வி கண்டால் கூட,. கிட்டத்தட்ட கதை முடிந்து விடும்.’ ஏ’ பிரிவில் ஏற்கனவே, பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணியிடத்தில் 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டுள்ளது. தற்போது, இந்தியாவிடத்திலும் தோற்றுள்ளது. இனிமேல், அரையிறுதிக்கு முன்னேறுவது கடினம். நியூசிலாந்து அணி நாளை வங்கதேச அணியுடனான போட்டியில் வெற்றி பெற்று விட்டால் அந்த அணி எளிதாக அரையிறுதிக்கு முன்னேறி விடும்.