2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. இந்த தொடரை பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை நடத்த திட்டமிட்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதற்கான வரைவு அட்டவணையையும் தயார் செய்துள்ளது.
இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட பாகிஸ்தான் அணியுடன், இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து மற்றும் வங்கதேசம் என 8 அணிகள் தகுதி பெற்றுள்ள நிலையில், இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம் ஆகிய 4 அணிகள் ஒரு பிரிவில் இருப்பது போல அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த தொடரை லாகூர், கராச்சி மற்றும் ராவல்பிண்டி என 3 மைதானங்களில் நடத்த திட்டமிட்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், இந்தியாவுக்கான அனைத்து போட்டிகளும் லாகூர் மைதானத்தில் நடைபெறும் வகையில் அட்டவணையை தயாரித்துள்ளதாகவும், இந்தியா vs பாகிஸ்தான் ஆட்டத்தை மார்ச் 1 அன்று நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், பாதுகாப்பு காரணங்களால் பாகிஸ்தானுக்கு செல்ல ஐசிசியிடம் பிசிசிஐ மறுப்பு தெரிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இந்த தொடரை ஹைபிரிட் மாடலில் நடத்த வேண்டும் எனவும் ஐசிசியிடம் இந்திய கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைக்கவுள்ளதாகவும், இந்தியா விளையாடவுள்ள போட்டிகளை துபாய் அல்லது இலங்கையில் நடத்த பரிந்துரைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக, 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா பங்கேற்குமா? அடுத்து என்ன நடுக்கும்? என்ற அச்சம் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
– மகிழ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சார்பதிவாளர் அலுவலகங்களில் இன்று கூடுதல் டோக்கன்கள்… எதற்காக?
பியூட்டி டிப்ஸ்: உங்களுக்கான கண்ணாடி எது?
ஹெல்த் டிப்ஸ்: எலும்பு முறிந்தவர்களுக்கு ஏற்ற உணவுகள் எது தெரியுமா?
டாப் 10 நியூஸ்: செந்தில் பாலாஜி வழக்கு முதல் இந்தியன் 2 ரிலீஸ் வரை!