இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று (ஆகஸ்ட் 1) இரவு இந்திய நேரப்படி 8 மணிக்கு நடைபெறுகிறது.
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் முதல் ஆட்டத்தில் இந்தியா 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி பாசட்டரேவில் உள்ள வார்னர் பார்க் மைதானத்தில் இன்று (ஆகஸ்ட் 1) நடக்கிறது.
தொடக்க ஆட்டத்தில் 190 ரன்கள் குவித்து எதிரணியை 122 ரன்னில் மடக்கிய ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இன்றைய ஆட்டத்திலும் ஆதிக்கத்தை தொடரும் முனைப்புடன் தயாராகி வருகிறது.
அதே வேளையில் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் போட்டியில் அடைந்த தோல்விக்காகவும், முதல் வெற்றிக்காகவும் கடுமையாக போராடும்.
தொடக்க ஆட்டத்தில் செய்த தவறுகளை திருத்திக்கொண்டு பதிலடி கொடுக்க முயற்சி செய்வார்கள். எனவே, பரபரப்புக்கு குறைவிருக்காத இன்றைய ஆட்டத்தில் ஜெயிக்கப் போவது யாரு என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
-ராஜ்
