கிழக்கு ஜெருசலேம் உட்பட பாலஸ்தீனப் பகுதிகளிலிருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் என்கிற ஐ.நா தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது.
இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே நடக்கும் மோதல் அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் , கடந்த 3 ஆம் தேதி ‘பாலஸ்தீனப் பிரச்சினைக்கு அமைதி தீர்வு என்ற தலைப்பில் செனகல் நாடு ஒரு தீர்மானத்தை ஐ.நா. வில் கொண்டு வந்தது.
வரலாற்று ரீதியாக பாலஸ்தீன நாட்டின் இறையாண்மையை ஆதரித்து வரும் இந்தியா, சமீபகாலமாக இஸ்ரேல் நாட்டுடன் ராணுவம், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் உறவை வலுப்படுத்தியுள்ளது. ஆனாலும், பாலஸ்தீனம் தொடர்பான தீர்மானத்திற்கு இந்தியா தனது ஆதரவை மீண்டும் பதிவு செய்துள்ளது. இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், உள்ளிட்ட 157 நாடுகள் இந்த தீர்மானத்தை ஆதரித்துள்ளன.
இஸ்ரேல், அமெரிக்கா,அர்ஜென்டினா , ஹங்கேரி உள்ளிட்ட 8 நாடுகள் மட்டும் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்துள்ளன. அதே வேளையில் 7 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் நடத்தி வரும் சட்டவிரோத நடவடிக்கைகளை அமெரிக்கா போன்ற சில நாடுகள் ஆதரித்து வருவதால் இதுவரையில், இந்த பிரச்னையில் எந்த சுமூகமான முடிவையும் எட்ட முடியவில்லை.
பல காலமாக இஸ்ரேலும் பாலஸ்தீனமும் பாதுகாப்பான எல்லைகளைக் கொண்ட சுதந்திர நாடுகளாக இருக்க வேண்டும் என்பதை இந்தியா ஆதரித்து வந்தது. தற்போது, பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக வாக்களித்திருப்பது, அந்த மக்களின் உரிமைகளுக்கு ஆதரவாக இந்தியா இருப்பதை காட்டுவதாக அமைந்துள்ளது. இந்தியாவின் இந்த முடிவு சிறந்த வெளியுறவு கொள்கை என்றும் நீண்ட காலமாக உலக நாடுகளிடையே உள்ள பிரச்சினையை தீர்க்க இந்தியா கொண்டுள்ள ஆர்வத்தை காட்டுவதாகவும் அரசியல் நிபுணர்கள் கூறியுள்ளர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
-எம்.குமரேசன்
அடேங்கப்பா… பிட்காயின் மதிப்பு இவ்வளவு உயர்ந்திடுச்சா?
சரி கமப நிகழ்ச்சி வழியாக தர்ஷினி கிராமத்துக்கு கிடைத்த பஸ் போக்குவரத்து… எப்படி?