இந்தியாவில் நடைபெற்றுவரும் 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 21வது லீக் போட்டியில் இன்று(அக்டோபர் 22) இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன.
இந்த தொடரில், இதுவரை 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று நியூசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகள் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களில் உள்ளன.
அதனால், இந்த போட்டியில், யார் முதல் தோல்வியை சந்திப்பார்கள்? யார் வெற்றி பெற்று முதலிடத்தை கைப்பற்றுவார்கள்? என ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இதற்கிடையே நேற்று தர்மசாலாவில் பயிற்சியில் ஈடுபட்ட இந்திய அணியின் முக்கிய வீரரான சூர்யகுமார் யாதவுக்கு காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியானது.
பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது பயிற்சியாளர் ரகு ராகவேந்திரா வீசிய பந்து மணிக்கட்டில் பட்டு காயம் ஏற்பட்டதால், சூர்யகுமார் யாதவ் பயிற்சியில் இருந்து வெளியேறினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
முன்னதாக, வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில், இந்திய அணியின் துணை கேப்டனும், நட்சத்திர ஆல்-ரவுண்டருமான ஹர்திக் பாண்டியா காலில் காயம் ஏற்பட்டு போட்டியில் இருந்து விலகினார். இதை தொடர்ந்து, மருத்துவ கண்காணிப்பில் உள்ள ஹர்திக் பாண்டியா நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டார் என பிசிசிஐ அறிவித்தது.
இந்நிலையில், அவருக்கு மாற்றாக சூர்யகுமார் யாதவ் அணியில் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த செய்தி இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
அவருக்கு அடுத்தபடியாக, பேக் – அப் வீரராக இருக்கும் இஷான் கிஷனின் தலையில் ஒரு தேனீ கொட்டியதாக கூறப்பட்டதும் ரசிகர்கள் இடையே வருத்தத்தை ஏற்படுத்தியது.
ஒருவேளை, இவர்கள் இருவரும் இன்றைய போட்டியில் விளையாட முடியாமல் போனால், ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக ரவிச்சந்திரன் அஸ்வின் அணியில் சேர்க்கப்பட நேரிடும். அப்படியான பட்சத்தில், டாப் ஆர்டரில் ஒரு பேட்ஸ்மேனை குறைவாக கொண்டே, பலமான நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் களமிறங்கினால் அது இந்தியாவுக்கு பின்னடைவாக இருக்கும் என்று கருதப்பட்டது.
ஆனால் அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவின் மணிக்கட்டில் ஏற்பட்ட காயம் பெரிய அளவில் இல்லாததால், அவர் இன்றைய போட்டியின் ஆடும் லெவனில் இடம்பிடித்துள்ளார்.
அதே போன்று ஷ்ர்துல் தாக்கூரும் வெளியேற்றப்பட்டு, அவருக்கு பதிலாக அனுபவ வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி இடம்பிடித்துள்ளார்.
இதனை டாஸ் வென்ற பந்துவீச்சை தேர்வு செய்துள்ள இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா உறுதிபடுத்தியுள்ளார்.
முரளி
காசாவை தொடர்ந்து லெபனான்… போருக்கு தயாராகும் இஸ்ரேல்?
டென்மார்க் ஓபன்: மீண்டும் பி.வி.சிந்து அரையிறுதியில் அதிர்ச்சி தோல்வி!